'‛பிஸி' பி.டி.ஓ.,க்களால் பொதுமக்கள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'‛பிஸி' பி.டி.ஓ.,க்களால் பொதுமக்கள் தவிப்பு

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எனப்படும், பி.டி.ஓ.,க்கள், கூட்டம் என்ற பெயரில், அடிக்கடி அலுவலகத்திலிருந்து, 'எஸ்கேப்' ஆவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 வட்டார வளர்ச்சி அலுவலங்கள் உள்ளன. இதில், ஒரு ஒன்றியத்திற்கு தலா இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என, 26 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர்.ஒருவர், வட்டார நிர்வாகம் கண்காணிக்கிறார். மற்றொருவர், ஊராட்சிகளின் நிர்வாகத்தை கண்காணிக்க தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊராட்சிகளை கண்காணிக்கும் தனி அலுவலருக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நாள் கணக்கில், அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.இது போன்ற கூட்டங்கள், வாரத்திற்கு மூன்று நாட்கள் நடப்பதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூட்டம் முடிந்தவுடன் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்.இதனால், அரசு வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்டி முடிக்கப்பட்ட பயனாளிகள் கட்டுமான பொருட்கள் பெறவும், காசோலை பெறுவதற்கும், நாள் கணக்கில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.சில நேரங்களில், நாள் முழுக்க, அதிகாரிகள் வராததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.


- -நமது நிருபர்- --

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை