சரணாலய ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரணாலய ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்!

Added : பிப் 14, 2018
Advertisement

வேடந்தாங்கல்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பல ஆண்டுகளாக, மிக குறைந்த சம்பளத்தில், தற்காலிமாக, ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சம்பளம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல், கரிக்கிலி போன்ற இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு சிலர் தவிர, 15க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாகப் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர், பல ஆண்டுகளாக மிகக் குறைந்த சம்பளத்திற்கு பணி புரிந்து வருகின்றனர். 6,500 ரூபாய் தான் வழங்கப்படுகிறது என, ஊழியர்கள் புலம்புகின்றனர்.பணி நிரந்தரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது எனற வருத்தம் இவர்களிடம் காணப்படுகிறது. சம்பளமாவது சற்று உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான வேண்டுகோளும் இவர்களிடம் காணப்படுகிறது.வனத்துறை வட்டாரங்கள் கூறும்போது, 'வனத்துறையில் பல காலியிடங்கள் உள்ளன. நிதி நிலைமையை கருதி தான், அரசு நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர். தற்காலிக ஊழியர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது' என்றன.

Advertisement