நாளை மயான கொள்ளை: போக்குவரத்து மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மயான கொள்ளை: போக்குவரத்து மாற்றம்

Added : பிப் 14, 2018
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நாளை, மயான கொள்ளை நடக்கிறது. இதற்காக, பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் சாலை, செங்கழுநீரோடை வீதி, கிழக்கு ராஜ வீதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.காஞ்சிபுரத்தில், ஆண்டுதோறும் சிவராத்திரி விழா முடிந்த பின் வரும், அமாவாசை அன்று, மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த விழாவில், பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட், கம்மாளத்தெரு, பெருமாள் நாயக்கர் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சுற்று வட்டார பக்தர்கள் விரதம் இருப்பர். பல வேடமணிந்து, அலகு குத்தி, மயானம் வரை ஊர்வலமாக செல்வர்.அங்காள பரமேஸ்வரி அம்மன், மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக செல்வார்.நிகழ்ச்சியை காண, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவர். இந்த ஊர்வலம், நாளை மாலை, 3:00 மணிக்கு மேல் துவங்குகிறது.மூன்று பிரிவாக நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒன்று, பழைய ரயில் நிலைய சுடுகாட்டை சென்றடையும். மற்ற இரு ஊர்வலமும், தாயார் குளம் சுடுகாட்டை சென்றடையும்.விழாவிற்காக, கிழக்கு ராஜவீதி சாலை மற்றும் செங்கழுநீரோடை வீதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.கூட்டத்தை கண்காணிக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட இருப்பதாக, போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement