போலீஸ் பாதுகாப்புடன் மகளிர் குழுவிற்கு தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் மகளிர் குழுவிற்கு தேர்தல்

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுப்பட்டினம்: புதுப்பட்டினம், ஊராட்சி அளவிலான, கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல், போலீஸ் பாதுகாப்புடன் நடந்து, பரபரப்பு ஏற்பட்டது.கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினத்தில், 93 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு, அவற்றுக்கான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பும் இயங்குகிறது.நிர்வாகிகள் தேர்விற்கான தேர்தல் நடத்த, மகளிர் குழுவினர், நிர்வாகத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது.இருதரப்பு தகராறு ஏற்படலாம் என கருதிய நிர்வாகம், போலீசாரையும் வரவழைத்தது. ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படுவதை அறிந்து வந்த, ஊராட்சி முன்னாள் தலைவர்கள், எங்களிடம் தெரிவிக்காமல் தேர்தல் நடத்துவது ஏன் என, ஆவேசத்துடன் கேட்டனர்.தற்போது தேர்தலை நிறுத்தி, பிறகு நடத்தலாம் என கூறி, அலுவலர்களை கட்டாயப்படுத்தி, வெளியேற்றியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைவராக சங்கீதா; செயலர் பொறுப்பிற்கு, அமராவதி; துணை செயலர் பொறுப்பிற்கு, மங்கைலட்சுமி தேர்ந் தெடுக்கப்பட்டனர்.பொருளாளர் பொறுப்பிற்கு, ராஜலட்சுமி மட்டுமே மனுதாக்கல் செய்த நிலையில், அவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நிர்வாகம் தீர்மானம் இயற்றியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X