நாளை மயான கொள்ளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மயான கொள்ளை

Added : பிப் 14, 2018
Advertisement

மேல்நல்லாத்துர்: மேல்நல்லாத்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை, 16ம் ஆண்டு, மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது.மேல்நல்லாத்துாரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மயானக் கொள்ளை நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 16ம் ஆண்டு, மயானக் கொள்ளை, நாளை, நடைபெற உள்ளது.முன்னதாக, நேற்று, காலை, 7:00 மணிக்கு மேல், காலை, 8:30 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடந்தது. பின், இன்று, காலை 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், மாலை, 7:00 மணிக்கு, பதி அலங்காரமும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.அதை தொடர்ந்து, நாளை, காலை, 7:30 மணிக்கு, மகா அபிஷேகத்திற்கு தீர்த்த குடம் எடுத்து வருதலும், பின், காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு, மகா அபிஷேகமும் தொடர்ந்து வேல்குத்துதல், தீச்சட்டி எடுத்தல் போன்றவை நடைபெறும்.பின், பிற்பகல், 2:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், மாலை, 5:00 மணிக்கு, மயானக் கொள்ளை உற்சவமும் நடைபெறும். அதன் பின், அங்காளம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Advertisement