மக்கள் குறைதீர் கூட்டம் : 324 மனுக்கள் ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம் : 324 மனுக்கள் ஏற்பு

Added : பிப் 14, 2018
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், 324 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி, 324 பேர் மனு அளித்தனர்.இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், தாட்கோ திட்டத்தில் தொழில் துவங்குவதற்காக, ஐந்து பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்று கோல் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர், முத்து, தனித்துணை ஆட்சியர், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement