அடிக்கடி பழுதாகியதால் சிமென்ட் சாலையாக மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடிக்கடி பழுதாகியதால் சிமென்ட் சாலையாக மாற்றம்

Added : பிப் 14, 2018
Advertisement

கும்மிடிப்பூண்டி: சுண்ணாம்புக்குளம் கிராமத்தில், தண்ணீர் தேங்கி அடிக்கடி பழுதாகும் சாலையை, சிமென்ட் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் இருந்து சுண்ணாம்புக்குளம் வரை செல்லும் பிற மாவட்ட சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருந்து, 400 மீட்டர் சாலையின் இரு புறத்திலும் கடைகள், வீடுகள் உள்ளன.அந்த இடைப்பட்ட சாலையில், தண்ணீர் தேங்கும் இடமாக இருப்பதால், அடிக்கடி சாலை பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கிராம மக்களின் தொடர் புகார் காரணமாக, அதை சிமென்ட் சாலையாக மாற்றி அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன், துவங்கப்பட்ட பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 400 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் அந்த சிமென்ட் சாலை, தரமாகவும் நீண்ட காலம் உறுதியோடும் இருக்கும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement