திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பாதுகா சகஸ்ர க்ரந்த பாராயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பாதுகா சகஸ்ர க்ரந்த பாராயணம்

Added : பிப் 14, 2018
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், வேதாந்த தேசிகனின், 750வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, பாதுகா சகஸ்ர க்ரந்த பாராயணம் நடந்தது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், வேதாந்த தேசிகனின், 750வது திருநட்சத்திர மகோற்சவம் நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், தாயார், தேசிகன் உள்புறப்பாடு நடைபெற்றது. 10 மணியளவில், வீரராகவர் சன்னதியில், பாதுகா சகஸ்ர க்ரந்த பாராயணம் துவங்கி, பிற்பகல், 3:00 மணி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, அஹோபிலமடம், 46ம் ஜீயர், ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகன் முன்னிலையில் நடந்தது. மாலை பெருமாள், தேசிகன் மாட வீதி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement