பூங்கா அடிக்கல் நாட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா அடிக்கல் நாட்டு விழா

Added : பிப் 14, 2018
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், முதுகுளத்துாரில் 2 இடங்களில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் நீரூற்றுக்களுடன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பூங்கா அமைக்க எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், செயல் அலுவலர் இளவரசி அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் முத்துராமலிங்கம், மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி, முதுகுளத்துார் தொகுதி மேம்பாட்டு குழு செயலாளர் துரைப்பாண்டியன், துணை தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement