பிப். 22 வரை தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிப். 22 வரை தடுப்பூசி முகாம்

Added : பிப் 14, 2018
Advertisement

சிவகங்கை:கோடைக்காலம் துவங்க உள்ளநிலையில் புறக்கடைக் கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோய் ஏற்பட்டால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளன. இதை தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப். 9 முதல் பிப். 22 வரை இருவாரங்களுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம் 2 கால்நடை மருத்துவமனைகள், 77 மருந்தகங்கள், 41 கிளை நிலையங்களில் நடக்கின்றன. இதில் கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என, கலெக்டர் லதா
தெரிவித்தார்.

Advertisement