திருப்புவனம் பெட்டிக்கடைகளில் மது விற்பனை தாராளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனம் பெட்டிக்கடைகளில் மது விற்பனை தாராளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : பிப் 14, 2018
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை அதிகரித்து வருகிறது.

திருப்புவனத்தில் நீதிமன்ற தடைக்கு முன் 5க்கும் மேற்பட்ட கடைகள் நகர்ப்பகுதியில் இருந்தததால் குடிமகன்களுக்கு சிரமமின்றி சரக்கு கிடைத்து வந்தன. நீதிமன்ற தடை காரணமாக கடைகள் அனைத்தும் நகருக்கு வெளியே சென்று விட்டதால் குடிமகன்களின் அவசர தேவைக்கு சரக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

குடிமகன்களின் சிரமத்தை அறிந்து கொண்ட சிறு சிறு பெட்டிகடைகளில் மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் இங்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திருப்புவனம் மெயின் ரோட்டில் உள்ள ஏராளமான பெட்டி கடைகளில் சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

டாஸ்மாக் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பெட்டி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.பெட்டிகடைகளில் காலையிலேயே சரக்கு விற்பனை செய்யப்படுவதால் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பள்ளி அருகே மதுபானங்களை அருந்தி விட்டு மாணவிகளை கேலி செய்யும் கும்பல் அதிகரித்து வருகின்றன.

பெட்டி கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வது பற்றி போலீசிற்கு புகார் சென்றாலும்
கண்டு கொள்வது கிடையாது. மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் பெட்டிகடைகளில் மதுபானங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement