உதவ ஆளில்லாமல் அவதி 70 வயது மூதாட்டி தற்கொலை:கழுத்தை அறுத்த பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவ ஆளில்லாமல் அவதி 70 வயது மூதாட்டி தற்கொலை:கழுத்தை அறுத்த பரிதாபம்

Added : பிப் 14, 2018
Advertisement

சிவகங்கை:உதவிக்கு யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த 70 வயது மூதாட்டி தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
சிவகங்கை அருகே உள்ள படமாத்துாரை சேர்ந்தவர் அம்மாசி. சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி பாண்டியம்மாள்,70.
இவர் தனது ஒரே மகளை மானாமதுரை அருகே உள்ள பீசர் பட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்த சங்கிலி முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
வயது முதிர்ச்சியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பாண்டியம்மாள் படமாத்துார்
வீட்டில் தனியே வசித்து வந்தார்.
வருமானத்திற்கு வழியின்றியும், உதவிக்கு யாரும் இல்லாமலும் கஷ்டப்பட்டு வந்த பாண்டியம்மாள், வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்குள் இருந்த அரிவாளை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார்.
அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பீசர்பட்டினத்தில் உள்ள பாண்டியம்மாளின் மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் படமாத்துாருக்கு வந்த மருமகன் சங்கிலி முருகன், 108 ஆம்புலன்ஸ் மூலம் பாண்டியம்மாளை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
குழந்தைகளுடன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது மகள் மற்றும் மருமகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்த பாண்டியம்மாளுக்கு உடனடியாக ஆப்பரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும், சிறிது நேரத்தில் அவர் இறந்து
விட்டார். இதுகுறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement