மடப்புரம் கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மடப்புரம் கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை

Added : பிப் 14, 2018
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் முன்னெச்சரிக்கையாக தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று.

இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆடி வெள்ளி கிழமைகளில் அதிகளவு அம்மனை தரிசிக்க பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் தீத்தடுப்பான் கருவி, நுரை பீய்ச்சும் கருவி, இரும்பு வாளிகளில் மணல் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement