மன நல விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன நல விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 14, 2018
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் செஞ்சிலுவை சங்கமும், ராமநாதபுரம் மனநல திட்டமும் இணைந்து மன நல விழிப்புணர்வு முகாமை சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடத்தின.

கல்லுாரி தாளாளர் தேவ மார்ட்டின் மனோகரன் தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க தலைவர் எஸ்.ஹாரூன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஆனந்த் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் அன்வர்தீன் மன நல கருத்துக்களை தெரிவித்தார். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் பெரியார் லெனின் பேசினார். உதவி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement