விபத்தில் சிக்கிய உப்பு வியாபாரிக்கு இழப்பீடு தராத அரசு பஸ் ஜப்தி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய உப்பு வியாபாரிக்கு இழப்பீடு தராத அரசு பஸ் ஜப்தி

Added : பிப் 14, 2018

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் விபத்தில் சிக்கிய உப்பு வியாபாரிக்கு இழப்பீடாக 3.29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் அருகே பெருங்குளம் சேதுபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி,49, இவர் மாட்டு வண்டியில் உப்பு வியாபாரம் செய்து வந்தார். 2014 ஏப்., ல் வியாபாரத்தை முடித்து மாட்டு வண்டியில் பெருங்குளத்திற்கு திரும்பினார்.

அப்போது இரவு அழகன்குளத்திற்கும், நதிப்பாலத்திற்கும் இடையே வந்த போது, ராமநாதபுரத்தில் இருந்து ஆற்றங்கரை கிராமத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ் மாட்டு வண்டி மீது மோதியதில் மாடு, வண்டி சேதமடைந்தது. சுப்பிரமணிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இது குறித்து ராமநாதபுரம் சப் கோர்ட்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
2.58 லட்சம் ரூபாய் சுப்பிரமணிக்கு இழப்பீடு வழங்க சப் கோர்ட் நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார். இந்த தொகையை தராததால், உத்தரவினை நிறைவேற்றக்கோரி சுப்பிரமணி வழக்கு தொடர்ந்தார்.
அவருக்கு இழப்பீட்டு தொகை வட்டியுடன் சேர்த்து 3.29 லட்சம் வழங்கவில்லை. காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்துக்கழக, ராமநாதபுரம் கிளையை சேர்ந்த பஸ்சை, நீதிமன்ற
பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X