மணல் அள்ளும் பிரச்னை வி.ஏ.ஓ.,களிடம் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் அள்ளும் பிரச்னை வி.ஏ.ஓ.,களிடம் விசாரணை

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துாரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் பகுதிகளில் பணியாற்றும் வி.ஏ.ஓ., க்களிடம் பரமக்குடி சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் விசாரணை நடத்தினார்.
முதுகுளத்துார் பகுதியில் வரத்து கால்வாய், கண்மாய்கள், விளை நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதால், நீர்நிலை ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்
செய்தனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படும் பகுதிகளான முதுகுளத்துார், இளஞ்செம்பூர், விளங்குளத்துார், கீழத்துாவல், காக்கூர் ஆகிய வி.ஏ.ஓ., க்களை அழைத்து, பரமக்குடி சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் விசாரணை நடத்தினார்.இரவு நேரங்களில் அனுமதியின்றி விளை நிலங்கள், வரத்து கால்வாய்கள், கண்மாய்களில் மணல் அள்ளினால் உதவியாளர்கள் உதவியுடன் வி.ஏ.ஓ., க்கள் போலீசில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X