ரயில் மறியல் செய்ய முயற்சி மாணவர் சங்கத்தினர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் மறியல் செய்ய முயற்சி மாணவர் சங்கத்தினர் கைது

Added : பிப் 14, 2018
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, என்பதை வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய சென்ற இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரமநாதபுரம் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரத்தினம் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, தலைவர் கோபி உட்பட நிர்வாகிகள் ரயில் மறியல் செய்ய ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர் அங்கு போலீசார் 23 பேரை கைது செய்தனர்.

இதில் ரயில்வே துறையினை தனியார் மயமாக்க கூடாது, பணியிலிருந்து ஓய்வு பெற்வர்களை மீண்டும் பணியமர்த்தக்கூடாது, என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement