தொப்பி தயாரிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும் பனைஓலை குருத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொப்பி தயாரிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும் பனைஓலை குருத்து

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேவிபட்டினம்:தொப்பி தயாரிப்பிற்காக தேவிபட்டினம் பகுதியில் இருந்து பனை ஓலை குருத்தில் இருந்து பின்னப்படும் குருத்து ஜடை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

தேவிபட்டினம் அருகே குலசேகரகால்,தேர்போகி,புதுவலசை, தாமரையூரணி,ஆற்றாங்கரை,பழனிவலசை, சித்தார்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமத்தினர் பனை ஓலை மூலம் ஓலைபாய்,ஓலைப் பெட்டி, அழகு சாதன பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பனை ஓலை குருத்தில் இருந்து ஜடை வடிவில் பின்னப்படும் ஓலைச் ஜடை தலையில் அணியும் தொப்பி தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் பனை ஓலை குருத்தில் பின்னப்பட்டு வரும் குருத்து ஜடைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் தொப்பி தயாரிப்பிற்காக ைஹதராபாத், பெங்களூரு, கேரளா சென்னை,கொடைக்கானல்,தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இதனால் பனை ஓலை குருத்தில் பின்னப்பட்டு வரும் குருத்து ஜடைக்கு இப்பகுதியில் மவுசு ஏற்பட்டுள்ளது.
தேர்போகி வியாபாரி தங்கவேல் கூறுகையில், பனை ஓலையின் இளம் குருத்து ஓலையில் இருந்து பெண்களின் ஜடை போன்று சுமார் 7 மீட்டர் நீளத்தில் ஓலை ஜடை பின்னப்படுகின்றன.
இந்த ஓலை ஜடைகளை தொப்பிகளின் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் துணிகளுக்குள் வைத்து தைத்து தொப்பி தயார் செய்யப்படுகின்றன. இந்த ஓலை ஜடையை வெளியூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இப்பகுதி பெண்களுக்கு அன்றாட வருமானம் தரும் தொழிலாக உள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை