நெல்லையில் 12 சிறுவர்கள் தப்பியோட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் 12 சிறுவர்கள் தப்பியோட்டம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நெல்லை சிறுவர்கள்,  சிறுவர் சீர்திருத்த பள்ளி, சிறுவன் தற்கொலை,  கூர்நோக்கு இல்லம் , சிறுவர்கள் தப்பியோட்டம்,Children of Nellai, Children Reform School, Boy Suicide, Children Escape,govt observation home,

திருநெல்வேலி: நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியான கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 பேர், வார்டனை தாக்கிவிட்டு தப்பியோடினர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் கைது செய்யப்படும் போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே, இளம் வயதில் தவறிழைக்கும் மாணவர்களை திருத்தும் வகையில் சீர்திருத்த பள்ளியான கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 32 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒழுக்கம், கல்வி ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாணவர்கள் உறங்கச் சென்ற நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த அழகு ராமர், இசக்கி ராஜா, ராஜ்குமார்; நெல்லையைச் சேர்ந்த பால்துரை; சாக்கோட்டையைச் சேர்ந்த சூரியா; தட்டப்பாறை மாரி கண்ணன உள்ளிட்ட12 பேர் வார்டன் சண்முக ராஜனை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
கூர்நோக்கு இல்ல வார்டன் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பி சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கலாம் என்ற அடிப்படையிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது. இந்த வேட்டையில்4 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிப்பட்ட நான்கு பேரில் ஒருவன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - TVL,இந்தியா
14-பிப்-201811:32:08 IST Report Abuse
makkal neethi சீர்திருத்தத்திற்கு போனவர்கள் ஓடுகிறார்கள் என்றால் உள்ளே ஏதோ தவறு நடக்கிறது சித்ரவதை நடக்கிறது என்று கூட நினைக்கலாம் ஆய்வு செய்வது அவசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X