Government Likely To Make GPS Mandatory In Feature Phones | சாதாரண போன்களிலும் ஜிபிஎஸ் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாதாரண போன்களிலும் ஜிபிஎஸ் கட்டாயம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மொபைல் போன், ஜிபிஎஸ் வசதி,  பெண்கள் பாதுகாப்பு , மத்திய பெண்கள் நலத்துறை, அமைச்சர் மனோஜ் சின்ஹா, Mobile phone, GPS facility, 
central government, women security,ministry of central women welfare, minister Manoj Sinha,மத்திய அரசு,

புதுடில்லி: ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மொபைல் போன்களிலும் ஜிபிஎஸ் வசதி மற்றும் எச்சரிக்கை பட்டன் இருப்பது கட்டாயம் என்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவிட ஜிபிஎஸ் மற்றும் எச்சரிக்கை பட்டன் இடம்பெற செய்ய வேண்டும் என அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கும் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்கும் என உரிமையாளர்கள் கூறியதை தொடர்ந்து சாதாரண போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சக அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், ஜிபிஎஸ் வசதி எச்சரிக்கை பட்டன் பொருத்த விலக்கு அளித்து 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்று கொள்வதாக தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என பெண்கள் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் அனைத்து சாதாரண மொபைல்களிலும் ஜிபிஎஸ் மற்றும் எச்சரிக்கை பட்டன் இடம்பெறுவது அவசியமாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
14-பிப்-201814:49:24 IST Report Abuse
JeevaKiran அது சரி, இப்போ எந்த போனிலும் எச்சரிக்கை பட்டன் இருப்பதாக தெரியவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201813:26:30 IST Report Abuse
Dr Vijaya Choumiyan ஐ போன் 5 வைத்திருக்கிறார் போட்டோவில் இருப்பவர். இதை தான் உங்கள் போட்டோக்ராபர் பி[ஆடம் பிடித்திருக்கிறாரா? ஆபத்து என்பது போட்டோ கண்ணோட்டத்திலும், மற்றவர் பார்வையிலும் தான் இருக்கிறது. கண்ணை குத்த வேண்டும். தவறு செய்வோருக்கு. அப்படி நடந்தால் பாதுகாப்பு தானாகவே இயல்பாக வந்துவிடும். ஆண்பார்வை வக்கிரப்பார்வை என்பார்கள் அது சரிதானா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201814:48:08 IST Report Abuse
தமிழ்வேல் பள்ளிகளில் தற்காப்பிற்கு பயிற்சிகள் இப்போதே அளிக்கப் பட வேண்டும். அல்லது, மற்றவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகளிலேயே மாலையில் பயிற்சி தரலாம்....
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201811:56:30 IST Report Abuse
ஆப்பு இது என்ன கூமுட்டைத்தனமா இருக்கு? பெண்களுக்குத் தேவைன்னா அவிங்க GPS வெச்ச போன் வாங்கட்டுமே....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201814:44:40 IST Report Abuse
தமிழ்வேல் அதைத்தான் சொல்றாங்க ஆப்பு... அதாவது புதுசாதான் வாங்கனும். எப்போதும் போல பழசு குப்பைக்குப் போகும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X