பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஐகோர்ட் நோட்டீஸ்,  பாலிடெக்னிக்  தேர்வு முறைகேடு , பள்ளி கல்விதுறை, ஆசிரியர் வாரியம், Polytechnic Lecturer Examination, HC notice, Polytechnic Examination Scam, School Education Department, Teacher Board,

மதுரை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை இளமதி தாக்கல் செய்த மனு:நான், எம்.எஸ் சி., - பி.எட்., எம்.பில்., படித்துள்ளேன்.அரசு பாலிடெக்னிக் கல்லுாரி களில், விரிவுரை யாளர் பணிக்கு, 2017 செப்., 16ல் நடந்த தேர்வில் பங்கேற்றேன்.விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில், தனியார் ஏஜன்சி ஈடுபட்டது. 200 பேரின் விடைத்தாள்களில், தவறான பதில்களுக்கு மதிப்பெண் வழங்கி, முறைகேடு நடந்தது தெரிந்தது. இதனால், தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதாக, பிப்., 9ல், டி.ஆர்.பி., அறிவித்தது. மொத்தம், ௧.௩௩ லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். 200 பேர் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. இதற்காக, தேர்வு எழுதிய அனைவரும் பொறுப்பேற்க முடியாது.தேர்வு ரத்தால், எங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தேர்வு நடைமுறையில், தவறு நடக்கவில்லை. ஏற்கனவே நடந்த தேர்வின்படி, எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்துவது என்ற, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்; அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, தமிழக உயர்கல்வித் துறை செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி, பிப்., 22க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை