பிரதமர் புறக்கணிப்பா? : ஜெயகுமார் விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் புறக்கணிப்பா? : ஜெயகுமார் விளக்கம்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 Minister Jayakumar, Jayalalitha photo, Stalin, அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா படம் திறப்பு, ஸ்டாலின், செயல்படாத அரசு ,  
 inactive government,தமிழக அரசு,tamilnadu government

சென்னை: ''ஜெ., படத் திறப்பு நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடியை அழைக்கவில்லை,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் திறக்கப்பட்ட விழாவிற்கு, பிரதமர் ஏன் வரவில்லை; ஜனாதிபதி ஏன் வரவில்லை என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கேட்டுள்ளார். யாரை, எப்போது, எப்படி அழைக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அவர்கள் கற்றுத் தர வேண்டியதில்லை. சட்டசபையில், எம்.ஜி.ஆர்., படத்தை, 1992ல், ஜெ., திறந்து வைத்தார். ஜெ., படத்தை, சபாநாயகர் திறந்து வைத்துள்ளார். பிரதமர், ஜனாதிபதி, கவர்னரை, நாங்கள் அழைக்கவில்லை; அதனால், அவர்கள் வரவில்லை.மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு, அரசியல் கட்சிகள், கொள்கைகள் வகுத்து, மக்கள் முன் வைக்கின்றன. அதை ஏற்றுக் கொண்டால், மக்கள் அங்கீகாரம் வழங்குகின்றனர். அந்த வகையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு, மக்கள் அங்கீகாரம் கொடுத்தனர். வருங்காலத்திலும் இந்த மண்ணில், ஜெ., ஆட்சி தான் மலரும். தி.மு.க., ஆட்சியில் தான், போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது. போக்குவரத்துக் கழகம் தொடர்பாக, முதல்வரிடம் அறிக்கை அளிக்க, ஸ்டாலின் அனுமதி கேட்டார். அரசியல் பண்பாட்டை காக்க, அவரை அழைத்து பேசினோம்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-201816:59:15 IST Report Abuse
a.thirumalai உனக்கு இது ரொம்ப ஓவரா தெரியல.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201814:25:33 IST Report Abuse
தமிழ்வேல் கவர்னர், பிரதமர், ஜனாதிபதி அண்டை மாநில முதல்வர்கள் இவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்காமல் திறந்து வைத்தது, அல்லது அவர்களை அழைத்தும் வராதது உங்கள் தலைவிக்கு தந்த அவமரியாதை... அவையில் அந்த குற்றவாளியின் படத்தை மாட்டியது மற்ற சில நல்ல தலைவர்களுக்குத் தரவேண்டிய மரியாதை அல்ல.
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
14-பிப்-201813:16:53 IST Report Abuse
NERMAIYIN SIGARAM விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை அங்கே உங்களை துரத்தி துரத்தி அடித்து ஓடி வந்து விட்டீர்கள் இப்போ கதை இப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை