Kerala cabinet to decide on bus fare hike | கேரளாவில் பஸ் கட்டணம் உயர்கிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் பஸ் கட்டணம் உயர்கிறது

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா, பஸ் கட்டணம், உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி கொள்ள மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. மாணவர்களுக்கான சலுகை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பஸ் கட்டணத்தை மாற்றாவிட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக தனியார் பஸ் நிறுவனங்கள் கூறியதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி குறைந்த பட்ச கட்டணம் சாதாரண மற்றும் நகர பஸ்களில் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், பாஸ்ட் பாசஞ்சர் பஸ்களில் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் 13 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் டீலக்ஸ் செமி ஸ்லீப்பர் பஸ்களில் 20 ரூபாயிலிருந்து 22 ரூபாயாகவும், சொகுசு ஏசி பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும், வால்வோ பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.

மாநில போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் கூறுகையில், அரசியல் ரீதியாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் எனக்கூறினார்.



கேரளாவில் பஸ் கட்டணம் உயர்வு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
14-பிப்-201816:20:02 IST Report Abuse
Kailash அங்குள்ள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி எளிமையாக பஸ்ஸில் தான் பயணம் செய்வார் அவருக்கு கட்டுப்படியாகுமா? தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரளாவில் இப்படி இருக்கின்றனர் பக்கத்துக்கு மாநிலத்தில் இப்படி உள்ளது என்றாவது பெருமை கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
14-பிப்-201815:12:58 IST Report Abuse
sundaram அப்போ கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிச்சு மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தும். கூட்டணி தர்மத்தின்படி வைகோ அவர்கள் கேரளாவுக்கும் ஆட்கள் சப்ளை செய்வார்
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-பிப்-201815:05:51 IST Report Abuse
Nalam Virumbi தமிழ் நாட்டு உண்டியல் குலுக்கிகள் என்ன சொல்லப் போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
14-பிப்-201814:59:26 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN Ha ha uyarthakattanathil pokalame. Vazhke tharam uyrnthuvittathu.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-பிப்-201814:51:18 IST Report Abuse
makkal neethi ஓ பி எஸ் இ பி எஸ்ஸுக்கு தினமலரின் டிப்ஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை