Don't communalise martyrs: Army's Northern Command chief | மதத்திற்கு அப்பாற்பட்டது ராணுவம் : ஓவைசியின் கருத்துக்கு பதில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மதத்திற்கு அப்பாற்பட்டது ராணுவம் : ஓவைசியின் கருத்துக்கு பதில்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (70)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்திய ராணுவம், அசாதுதீன் ஒவைசி, மதச்சாயம், ராணுவ தளபதி தேவராஜ் அன்பு, சுஞ்சுவான் ராணுவ முகாம், பயங்கரவாதிகள் தாக்குதல் , இந்திய முஸ்லிம்கள்,  காஷ்மீர்,Indian Army, Asaduddin Owaisi, Army Commander Devraj anbu, Chunjuan Army Camp, Terrorists Attack, Indian Muslims, Kashmir,

புதுடில்லி: 'ராணுவம், மதத்திற்கு அப்பாற்பட்டது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு அவர் வீரராகவே பார்க்கப்படுகிறார். படையில், மதத்தை புகுத்துவதில்லை' என, ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், சுன்ஜுவான் ராணுவ முகாமில், சமீபத்தில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இது குறித்து, ஏ.ஐ.எம். ஐ.எம்., எனப்படும், அனைத்திந்திய மஜ்லிஸ் இத்யாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர், அசாதுதின் ஓவைசி கருத்து கூறியிருந்தார். 'முஸ்லிம்களின் தேசப் பற்று குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். ஜம்மு - காஷ்மீரில் நடந்த தாக்குதலில், உயிரிழந்த ஏழு பேரில், ஐந்து பேர் முஸ்லிம். முஸ்லிம்கள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்கின்றனர்.'ஆனால், எங்களை பாகிஸ்தானியர் என்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்கள் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், எங்களுடைய நேர்மையை நிரூபிக்கும்படி, இந்த நாடு கேட்கிறது' என, ஓவைசி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினென்ட் ஜெனரல், தேவ்ராஜ் அன்பு கூறியதாவது:ராணுவம், அனைத்து மதத்தினருக்கானது. இங்கு, அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். ராணுவத்தில், ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இங்கு அனைவருக்குமே, வீரர்கள் என்ற அடையாளம் மட்டுமே உண்டு. மதத்தின் அடிப்படையில், இங்கு எந்த பாகுபாடும் கிடையாது; பிரித்து பார்ப்பதும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.மதச்சாயம் பூசாதீர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
15-பிப்-201801:22:12 IST Report Abuse
Mohamed Ibrahim இஸ்லாமியன் நல்லது செய்தால் அவன் இந்தியன் ஆகிவிடுகிறான்.. அதே இந்தியன்(முஸ்லிம்) தவறிழைத்தால் இஸ்லாமியன் ஆகி விடுகிறான்.. இதுதான் பாரத தேசத்தின் நீதி???
Rate this:
Share this comment
Adhithyan - chennai,இந்தியா
15-பிப்-201811:42:54 IST Report Abuse
Adhithyanநீங்க எல்லாம் திருந்த மாட்டீங்க ...நீங்களும் சில தலைமுறை முன்னாடி வரை ஹிந்துக்கள் தான் ..மறக்க வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-பிப்-201821:38:25 IST Report Abuse
mindum vasantham Whoever is in alliance with dmk and vck should be destroyed
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-பிப்-201821:28:05 IST Report Abuse
Nallavan Nallavan ராணுவத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் ? இந்திய மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனரோ, அதே சதவிகிதத்தில் ராணுவத்தில் பணி செய்கிறார்களா ? ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், மூன்று படைகளிலும் அவர்கள் சேர்கிறார்களா அல்லது சேர்க்கப்படுகிறார்களா ? ஆம் என்றால் பிரச்னை இல்லை .... ஆனால் இதற்கு விடை இல்லை என்றால் அது ஏன் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் ஒவைசியை அல்லது தேவராஜ் அன்பு அவர்களை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவது முட்டாள்தனம் ....
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
14-பிப்-201820:31:27 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இந்தியாவில் உள்ள எல்லா ஹிந்துக்களையும் கொல்வேன் என்று கூறிய உத்தமர் இந்த ஒவைசி..
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
14-பிப்-201819:58:33 IST Report Abuse
N.Purushothaman ஏண்டா ? அப்போ அவுங்களை கொன்னதுவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தானே ? அதுக்கு என்ன சொல்ல போற ? புனித போரில அப்பாவி இஸ்லாமியர்களும் கொல்லப்படலாம்ன்னு சொல்றியா ? மானங்கெட்டவன்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201819:06:27 IST Report Abuse
yaaro "எனது படை வீரனின் நம்பிக்கையே எனது நம்பிக்கை, அவன் இந்துன்னா நான் இந்து, அவன் முஸ்லிமான நான் முஸ்லீம் " அப்படிங்கற தத்துவத்தை சயீத் அட்ன ஹசெய்ன் என்கிற முன்னாள் கர்னல் சொன்னார். அப்படிப்பட்ட உயரிய பாரம்பரியம் கொண்ட படை நமது . ஒவாய்சி போன்ற ஆட்களுக்கு என்ன தெரியும் ..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
14-பிப்-201818:56:21 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM பாஜக தப்பு கணக்கு போடுகிறது....மக்களுக்கு இப்போது எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து, ஒரு முடிவுக்கு வரத்தெரியும்...ஆக பாஜகவின் பப்பு வேகாது... கர்நாடகாவில் காங் மீண்டும் அமோக வெற்றி பெற்று பாஜகவின் கனவுக்கு முற்று புள்ளி வைக்கும்... காங் அல்லது காங் கூட்டணி தான் அடுத்தும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-பிப்-201819:56:54 IST Report Abuse
Shriramசவால் டா பிஜேபி ஜெயிக்கும்.. உன் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.....
Rate this:
Share this comment
Muthukumar - Tiruchengodu,இந்தியா
14-பிப்-201820:30:33 IST Report Abuse
Muthukumarகனவு காண்பது தவறில்லை. இன்னும் கொஞ்சம் நாள் இருக்கிறது. தூக்கத்தை தொடருங்கள்....
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
15-பிப்-201805:44:15 IST Report Abuse
Ranga Ramanathanபட்டாக்கத்தியால் கேக்கு வெட்டும் வீர பரம்பரை டம்ளர்...
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
14-பிப்-201818:48:31 IST Report Abuse
Nallappan Kannan Nallappan நீதான் குல்லா வாங்கி கொடுத்தியா நாலு வார்த்தை படிக்கவெச்சது எதுக்குன்னு இன்னும் உனக்கு புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
14-பிப்-201818:24:17 IST Report Abuse
unmaiyai solren ஒவைசி சொன்னதில் தவறேதுமில்லை உண்மைதான்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-பிப்-201818:22:01 IST Report Abuse
rajan ராணுவத்தின் மேல் வீசுபவர்கள் பாகிஸ்தான் முஸ்லீமா இந்திய முஸ்லீமா? சொல்லு. கல்வீசுபவனை சுட்டு தள்ளீடுவோம். அவனுங்கெல்லாம் பாகிஸ்தான் கைகூலிகள் தானே, போட்டுதள்ளி கிளீன் கஷ்மீர் ஓவைசி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை