பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (22)
Advertisement
பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

திருவனந்தபுரம் : சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஒரு அடார் லவ் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. அதில், அறிமுக நடிகை பிரியா வாரியர், கண் அசைவு மூலம், ஹீரோவிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.பிரியா வாரியரின் வித்தியாசமான முக பாவங்கள், சமூக ஊடகங்களில், பரவலாக ரசிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதனால், ஒரே பாடலில், நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் நடிகையாக, பிரியா வாரியர் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல், முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, ஐதராபாதில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில், முகீத் கான் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி, அந்த படத்தின் இயக்குனர், ஓமர் லுலு கூறுகையில், ''திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை. அதில், முஸ்லிம்களுக்கு எதிரான வரிகள் எதுவும் கிடையாது.

''எல்லா சமூகத்தவராலும் பாடப்படும், பழமையான பாடலையே, அந்த படத்தில் சேர்த்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
15-பிப்-201819:33:12 IST Report Abuse
P. Kannan சுபெர்ப், இந்த பொண்ணு ஒரு ரவுண்ட் வருவா ???? காதலை ரசிங்கப்பா ................
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201809:17:46 IST Report Abuse
Agni Shiva இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைப்பதற்கு அதில் நடித்த ஒரே ஹிந்து பெண்ணிற்கு எதிராக ஒரு சிறு புகாரை கிளப்பி விட்டு அகில இந்திய இலவச விளம்பரத்திற்கு ஏற்பாடு செய்தாகி விட்டது. இந்த மாதிரி நரித்தந்திர வேலைகளை செய்து தான் தான் அரசியலில் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201810:29:35 IST Report Abuse
Malick RajaYou should get the price very soon...
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
15-பிப்-201807:57:17 IST Report Abuse
வெற்றி வேந்தன் சுதந்திரத்திற்கு வித்திட்டது என்று மார் தட்டிய இந்த சினிமா துறை மக்களை கேவலத்தின் உச்சிக்கு இட்டு செல்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X