மாயமான குழந்தைகளை கண்டறிய உச்ச நீதிமன்றம் அறிவுரை! Dinamalar
பதிவு செய்த நாள் :
அறிவுரை!
மாயமான குழந்தைகளை கண்டறிய உச்ச நீதிமன்றம்...
காகிதத்தில் மட்டும் அரசு பெருமையடிப்பதாக கடும் வேதனை

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியில், 280 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, கோடீஸ்வரரான, பிரபல நகைக் கடை உரிமையாளர், நிரவ் மோடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், 5,100 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Supreme Court,உச்ச நீதிமன்றம்


நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான, பிரபல நகைக் கடை உரிமையாளர் நிரவ் மோடி, 46, உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், அதிகாரிகள் உதவியுடன், 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்த வங்கி புகார் கொடுத்தது.அதனடிப்படையில், சி.பி.ஐ., கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தது.

அதில், 'டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட்' ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர், வங்கி அதிகாரிகள் உதவியுடன், வங்கிக்கு, 280.70 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

காங்., விமர்சனம்சி.பி.ஐ., பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், அதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு சொந்தமான, மும்பை, டில்லி, குஜராத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்பட, 10 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது.

இந்த சோதனையில், 5,100 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையில், பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று முன்தினம் கொடுத்துள்ள இரண்டு புகார்களில், நிரவ் மோடி உள்ளிட்டோர், 11.40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.


வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள, பிரபல நகைக் கடை உரிமையாளர் நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்ற சம்பவத்தை, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சொத்துகள் முடக்கம்
நிரவ் மோடி விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத், நேற்று கூறியதாவது:பிரதமர் மோடி, டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றபோது, அவரது குழுவில், நிரவ் மோடியும் இடம் பெற்றிருந்ததாக கூறுவது, தவறான தகவல். டாவோஸ் சென்ற, இந்திய தொழில் கூட்டமைப்பினரின் குழுவில் தான், அவர் இடம் பெற்றிருந்தார்.

தற்போது, நிரவ் மோடிக்கு சொந்தமான, 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தேடப்படும் நபராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றப்பட்டாரா பிரியங்கா?

நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு, ஒப்பந்தத்தின் படி, பணம் தராமல் ஏமாற்றப்பட்டதாக வெளியான தகவல் குறித்து, பிரியங்காவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பிரியங்காவுக்கு தர வேண்டிய பணம் தரப்படாமல் ஏமாற்றப்பட்டதாக வெளியாகும் தகவலில்

Advertisement

உண்மையில்லை. எனினும், மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிரவ் மோடியின் நிறுவன விளம்பர ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வது குறித்து, பிரியங்கா தரப்பில், அவரது வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜன., 1ல் தப்பியோட்டம்பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள, இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிரவ் மோடி, ஜன., 1ம் தேதியே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அவர், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம், 23ம் தேதி சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், நிரவ் மோடியும் இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பிரதமருடன் நிரவ் மோடியும் உள்ளார். நிரவ் மோடியின் சகோதரர் நிஷால், பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவரும், ஜன., 1ம் தேதியே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். நிரவின் மனைவி அமி, அமெரிக்ககுடியுரிமை பெற்றவர்.

நிரவின் நிறுவனங்களின் பங்குதார ரான, கீதாஞ்சலி நகைக் கடைகளின் உரிமையாளர் மெகுல் சின்னுபாய் சோக்சி மற்றும் அமி, ஜன., 6ம் தேதி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில், இந்த நான்கு பேரையும் தேடப்படும் நபர்களாக, சி.பி.ஐ., அறிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:25:01 IST Report Abuse

Srinivasan Kannaiyaகாவல்துறையினருக்கு தெரியும்...

Rate this:
jothi.n - chennai,இந்தியா
15-பிப்-201808:48:39 IST Report Abuse

jothi.nஅர சை மட்டுமே குறை சாெ ல்லி பயன் இல்லை முதலில் பெற்றவர் கடமை,பள்ளி,நண்பர்கள் மற்றும் இந்த சமுதாயம் இவர்களே ொ ருப்பு, 16 முதல் 24 வயதுடையவர்களே அதிக குற்றசெயல் களில் ஈடுபடுகின்றனர் இவர்கெடுப்பது சினிமா, செல் ோன் .

Rate this:
15-பிப்-201808:19:36 IST Report Abuse

JShanmugaSundaramஎன்ன நீதி என்னநியாயம் பல் இருக்கிறவன் கரும்புதிங்கிறான் வக்கீலாகிபலபொய்களைசொல்லி வாதாடிவெற்றிபெற்று நீதிபதி ஆகின்றனர்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X