'ஆசிட்' வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலர் தினத்தில் நிச்சயித்த நண்பர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஆசிட்' வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலர் தினத்தில் நிச்சயித்த நண்பர்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (14)
Advertisement

லக்னோ : 'ஆசிட்' வீச்சில் கடுமை யாக பாதிக்கப்பட்ட, 25 வயது பெண்ணுக்கும், அவரது நீண்ட கால நண்பருக்கும், காதலர் தினமான நேற்று, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஒடிசா மாநிலம், ஜகத்பூரைச் சேர்ந்த இளம்பெண், பிரமோதினி, 2009ல், கல்லுாரியில் தேர்வு எழுதி, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, பிரமோதினி காதலிக்க மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த ஒருவன், அவர் மீது, ஆசிட் வீசி தப்பி ஓடினான்.

இதில், பிரமோதினிக்கு, 80 சதவீத காயங்கள் ஏற்பட்டன; கண் பார்வையும் பாதிக்கப்பட்டது.ஜகத்பூரில், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரமோதினியை, 2014ல், மருத்துவ பிரதிநிதி, சரோஜ் சாஹுவுக்கு, அந்த மருத்துவமனை நர்ஸ் அறிமுகம் செய்து வைத்தார்.ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் படும் வேதனையை அறிய வந்திருந்த சரோஜ், பிரமோதினிக்கு உதவி செய்ய துவங்கினார்; நாளடைவில், தன் வேலையையும் உதறி, முழு நேரமும், பிரமோதினிக்கு சேவை செய்தார்.

'பிரமோதினி நடக்க, 10 மாதங்களாகும்' என, டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், சரோஜின் ஆறுதல் வார்த்தைகள் மற்றும் உதவியால், நான்கு மாதங்களில் எழுந்து நடக்க துவங்கினார்.பின், 'ஆசிட் வீச்சை நிறுத்துங்கள்' என்ற பிரசாரக் குழுவினரின் தொடர்பு, பிரமோதினிக்கு கிடைத்தது. அவர்களின் ஆலோசனைப்படி, டில்லி சென்ற பிரமோதினி, அங்கு சிகிச்சை பெற்றார்.

பிரமோதினி, ஒடிசாவை விட்டு டில்லி சென்றது, சரோஜ் மனதில், தாங்க முடியாத வெறுமையை ஏற்படுத்தியது.அவர் இன்றி, தன் வாழ்க்கை நிறைவு பெறாது என உணர்ந்தார், சரோஜ். சில நாட்களுக்கு பின், பிரமோதினிக்கு போன் செய்த சரோஜ், அவரை மணக்க விருப்பம் தெரிவித்தார்.

கண் பார்வை இல்லாத நிலையில், சரோஜ் தன்னை மணந்தால், இயல்பான வாழ்க்கை வாழ முடியாது என, தயக்கம் காட்டினார், பிரமோதினி. இருப்பினும், தன் நிலையில் சரோஜ் உறுதியாக இருந்ததால், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார், பிரமோதினி.நீண்ட சிகிச்சைக்கு பின், தற்போது, அவருக்கு, 20 சதவீத பார்வை கிடைத்துள்ளது.

இந்நிலையில், உ.பி., மாநிலம், லக்னோவில், ஆசிட் வீச்சுக்கு எதிரான பிரசார இயக்கத்தால் நடத்தப்படும், 'ஷிரோஸ் ஹேங் அவுட் கபே' என்ற, காபி விற்பனை நிறுவன வளாகத்தில், காதலர் தினமான நேற்று, பிரமோதினிக்கும், சரோஜுக்கும், திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. அடுத்தாண்டு, அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக, நண்பர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201823:28:18 IST Report Abuse
தமிழ்வேல் பாராட்டுக்கள்.. அனைத்து நலன்களுடன் நீடுழிவாழ வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Mohammed Rafeeq - Manchester,யுனைடெட் கிங்டம்
15-பிப்-201822:16:55 IST Report Abuse
Mohammed Rafeeq ஏதோ கடைசி வரை சந்தோஷமா வெச்சு காப்பாத்தின சரி
Rate this:
Share this comment
Cancel
Mohammed Rafeeq - Manchester,யுனைடெட் கிங்டம்
15-பிப்-201822:14:38 IST Report Abuse
Mohammed Rafeeq லவ் பண்ணி கட்டிக்கிட்டீங்களா இல்லேன்னா ஹீரோ ஆகணும் னு பரிதாப பட்டு கட்டிக்கிட்டீங்களா
Rate this:
Share this comment
Cancel
மனோ - pudhucherry,இந்தியா
15-பிப்-201814:51:36 IST Report Abuse
மனோ கண்கள் தானாக கலங்குகிறது ஐயா வாழ் த்துக்கள்
Rate this:
Share this comment
faizal - ,
15-பிப்-201820:31:00 IST Report Abuse
faizalபல்லாண்டு வாழ்க...
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
15-பிப்-201813:36:41 IST Report Abuse
Mohammed Abdul Kadar தியாக செம்மல் வாழ்க , நீடூடி வாழ்க , இந்த பெண்ணுக்கு வாழ்கை கொடுத்ததற்கு
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201809:31:10 IST Report Abuse
ushadevan வாழத்துக்கள். True love birds. God bless you both.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201808:55:09 IST Report Abuse
Venkatesh You are real boss
Rate this:
Share this comment
Cancel
Roobia.R - madurai  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201808:07:29 IST Report Abuse
Roobia.R you are a great man in the world.
Rate this:
Share this comment
Cancel
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
15-பிப்-201804:32:18 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK உங்களால் தான் உலகம் இயங்குகிறது
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
15-பிப்-201807:40:25 IST Report Abuse
Rajendra Bupathiஉண்மைதான் அன்பால்தான் உலகம் இயங்குகிறது?...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-201803:45:52 IST Report Abuse
Bhaskaran வாழ்த்துக்கள் நீடூழிவாழ்ந்து பிறருக்கு முன்னோடியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை