நாளை முதல் மின் ஊழியர் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் மின்சார வினியோகம் பாதிக்கும் Dinamalar
பதிவு செய்த நாள் :
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

இரு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் கோபம் அடைந்துள்ள, மின் வாரிய ஊழியர்கள், நாளை முதல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி முயற்சியாக, இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்தானதால், ஆத்திரமடைந்துள்ள ஊழியர்கள், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என, அறிவித்துள்ளனர்.

TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடுதமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் உட்பட, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, 2015 டிச., மாதம் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; இதுவரை வழங்கவில்லை.இதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், வாரிய அதிகாரிகள், பல முறை பேச்சு நடத்தினர். அதில், நிலுவை தொகையுடன், ஊதிய உயர்வு வழங்குமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தீர்வு இல்லை


நிலுவை தொகை இல்லாமல், 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க, மின் வாரியம் முடிவு செய்தது. ஆனால், தமிழக அரசின், நிதித் துறை, 2.40 மடங்கு உயர்வு போதும் என, மின் வாரியத்திடம் தெரிவித்தது.

அதை, ஊழியர்கள் ஏற்காததால், பேச்சில் தீர்வு ஏற்படவில்லை. சென்னை, தலைமைச் செயலகத்தில், மின் துறை அமைச்சர், தங்கமணி, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட, சில தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, ஜன., மாதம் பேசினார்.


அதில், ஊதிய உயர்வு முடிவு செய்யும் வரை, மாதத்திற்கு, 2,500 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக, அமைச்சர் தெரிவித்தார். அதற்கு, அந்த சங்கங்களும் ஒப்புதல் தெரிவித்தன.
இரு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காத நிலையில், இடைக்கால நிவாரணம் அறிவித்தது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சில சங்கங்கள், 16 முதல், வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன.இதையடுத்து, 'ஊழியர்கள், ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என்று, மின் வாரியம்எச்சரித்தது.

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், 12ம் தேதி பேச்சு நடத்தினர். அதில், எந்த முடிவும் ஏற்படாத நிலையில், 15ல், மீண்டும் பேச்சு நடத்த இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு


இந்நிலையில், இன்று நடக்கவிருந்த பேச்சு, நிர்வாக காரணங்களுக்காக, ஒத்தி வைக்கப்படுவதாகவும், பொது நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள், நாளை, திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.இதற்காக, சென்னை, தலைமை அலுவலகம் உள்ளிட்ட, பல அலுவலகங்களுக்கு சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், மின் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வேலைநிறுத்த போராட்டம் நடத்தினாலும்,

Advertisement

மின் உற்பத்தி, மின் வினியோகம், மின் கட்டணம் வசூல் என, எந்த பணிகளும் பாதிக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:பெருவெள்ளம், 'வர்தா, ஒக்கி' புயலின் போது, மின் வினியோகம் முடங்கியது.

அப்போது, ஊழியர்கள், போர்க்கால அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, அரசு இழுத்தடிகிறது.போராடினால் தான் தீர்வு கிடைக்கும் என, வேலைநிறுத்த போராட்டத்திற்கு, ஊழியர்களை துாண்டியது, அரசு தான். எனவே, திட்டமிட்டபடி, நாளை போராட்டம் நடக்கும். கட்சி பேதம் இல்லாமல், அனைத்து ஊழியர்களும் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

பொறியாளர்களும் பங்கேற்பு?

'வேலைநிறுத்த போராட்டத்தை, சில சங்கங்கள் மட்டுமே அறிவித்துள்ளதால், எந்த பாதிப்பும் இல்லை' என்று, மின் வாரிய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், போராட்டத்திற்கு, அனைத்து ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பதில், 10 ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கலாம்' என்று, நிதித் துறை, மின் வாரியத்திற்கு பரிந்துரைத்து உள்ளது. இது, இரு தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இன்று அறிவிப்பு?

வேலைநிறுத்த போராட்டத்தை எதிர்கொள்வது தொடர்பாக, மின் வாரிய இயக்குனர்கள், செயலர் ஆகிய உயரதிகாரிகள், நேற்று மாலை, முக்கிய ஆலோசனை நடத்தினர். அதில், ஊழியர்களுக்கு, 2.57 மடங்கும், பொறியாளர்களுக்கு, 2.40 மடங்கும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பேசப்பட்டுள்ளது. எனவே, இன்று ஊதிய உயர்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-பிப்-201807:00:23 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇரணுவ ஆட்சி நடந்தால் எந்த போராட்டமும் இருக்காது.. அவன்அவன் அவன்வேலையை பார்ப்பான் .கோஷம் கொடி கொண்டாட்டம் எல்லாம் இராது. சட்டத்தை மதிப்பார்கள் .மதிக்க வைப்பார்கள் .

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-பிப்-201815:29:35 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஜாதியை வைத்து மதிப்பிடுவது. அரசு வேலை வழங்குவது.. கோட்டா வழங்குவது எல்லாம் ஒழிக்கனும். .உழைக்க கூடியவனுக்கு வேலை வழங்கனும்.. முடியாதவனுக்கு உட்காரவைத்து சாப்பாடு போட்டு காக்கனும். .இறைவன் படைப்பை சோதிக்க எண்ணுவதும் சலுகை என காப்பதும் கூடாதுங்க.. போன ஜென்மாவில் அவன் செய்த பாவ புன்னியங்களுக்கு ஏற்ப கடவுள் இப்பிறவியை அளிக்கிறார் எனவே அவர்களையும் போராட வைக்க கூடாதுங்க..தன் சுய தோழில் புரிய ஊக்கம் தரனும்ங்க அப்போதான் .நாடு முன்னேறும் ....ஜாதிக்கு சலுகை கொடுத்து குறைந்த மதிப்பெண்ணுக்கு வேலை கொடுத்தாலும் ஊதியம் குறையக்கூடாதுங்க குறைந்தா போராட்டம் உண்ணாவிரதம்.ஆனால் வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்எகனும் என்னங்க இது>>>>>>

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-பிப்-201815:19:05 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநாட்ல போராட்டம் என்று உண்டானதோ அன்றே சோம்பேரிகள் உண்டானர். ஊழல் உண்டானது. இருப்பதை வைத்து திருப்த்தி அடைவது நல்லதுங்க. ஏன் எம்எல்ஏவுக்கு லட்சம் சம்பளம் என்று போராடலாம். சேவை மனம் படைத்தவர்கள் அரசியலுக்கு வரலாம் கர்ம வீர்ரர் காமராஜ்போல் கனம் அப்துல் கலாமைபோல் உழைப்பவர்களே அரசியலுக்கு வரனுங்க அப்போதான் கடன்கார நாடு என்றபெயர் மறையும்.அப்படி பட்ட அன்பர்களை தேர்வு செய்வதே நம் கடமை .போராட்டம் வேலை நிறுத்தம் உண்ணாவிரதம் எல்லாம் நம் கடமையல்லங்க>>>>>

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-பிப்-201809:14:40 IST Report Abuse

Lion Drsekarஊதிய உயர்வு என்பது மழை வெய்யில் பாராமல் இராணுவ வீரர்களைப்போல் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வந்தே மாதரம்

Rate this:
Kumar - Chennai,இந்தியா
15-பிப்-201822:18:28 IST Report Abuse

Kumarபஸ் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றியதுபோல கரண்ட் கட்டணத்தையும் தாறுமாறாக ஏற்ற அரசும் அரசின் அதிகாரிகளும் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தமாக இருக்கலாமோ ஆட்சி முடியுமுன் அல்லது கலையுமுன் சுருட்ட வேண்டியதை சுருட்ட திட்டமோ எந்த வழிகளில் பணம் வெளியே போகிறது என்பதை கண்டுபிடித்தாலே ஒழுங்கான முறையில் சம்பளம் கொடுக்க முடியும். இது பஸ்ஸுக்கும் கரண்டுக்கும் பொருந்தும்.

Rate this:
TamilReader - Dindigul,இந்தியா
15-பிப்-201821:40:02 IST Report Abuse

TamilReaderகொள்ளை அடிக்கிற MLA மற்றும் மந்திரிகளுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு கொடுக்க உடனே அரசாணை இட்டது இந்த கொள்ளைய அடிக்கிற அரசு... ஆனால் இரவு பகலாய் உழைக்கும் தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வு கேட்டா... உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுகிறது இது என்ன ஞாயம் என்று தெரியவில்லை

Rate this:
Hari - Chennai,இந்தியா
15-பிப்-201820:57:48 IST Report Abuse

Hariசம்பளம் உயர்வு எவ்வளு கேட்கிறார்கள் மற்றும் எவ்வளவு கொடுக்க நினைக்கிறார்கள் என்று தெரியாமலே 2+ மடங்கு என்று கூறுகிறீர்கள்.அது கேட்காமலே மற்றவளுற்கு கொடுக்கும் சம்பளம் .எங்களுக்கு தற்போதைய சம்பளத்தில் 20 சதவிகிதம் அதிகம் .கொடுத்தாலே போதுமானது

Rate this:
Ramesh - chennai,இந்தியா
15-பிப்-201819:59:36 IST Report Abuse

Rameshபாரத நாட்டைப் பற்றி இத்தருணத்தில் பாரதி இல்லை

Rate this:
Soma Sundaram - Philadelphia,யூ.எஸ்.ஏ
15-பிப்-201819:35:22 IST Report Abuse

Soma Sundaramஅடேய் உங்க பொண்டாட்டி புள்ளைங்க தலையல கை வச்சி சொல்லுங்கடா நீங்க சம்பளத்துக்கா வேலை பாக்கிறிங்க...எதுகெடுத்தாலும் லஞ்சம் ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201819:16:32 IST Report Abuse

Pugazh V@மனோ :: மிகவும் சரி. நானும் இன்று வரை மின் இணைப்பு, கதவு எண், குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், எதுக்குமே காலணா கூட லஞ்சமாக கொடுக்கவில்லை. வீட்டில் விசேஷத்துக்கு போஸ்ட் லருந்து , சட்ட விரோதமாக, கரண்ட் இழுக்க சொல்வது, சிங்கிள் பேஸில் ஏசி, மோட்டார் சட்ட விரோதமாக போடறது., கிரமப்படி இல்லாமல் ஊடால பூந்து மின் இணைப்பு வாங்குவது எல்லாம் பொதுமக்கள் தான். சட்ட விரோதம் என்பதால் மக்கள். தாங்களாகவே லஞ்சம் கொடுக்கிறார்கள். அப்புறம் காந்தி மாதிரி பேசலாமா?

Rate this:
15-பிப்-201821:23:05 IST Report Abuse

krishnamoorthyMaking TNEB privatisation only to stop this corruption. Compare BSNL & other service providers in telephone communication dept. Development only threw competition and Private sector....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement