ஓராண்டு நிறைவடைந்தது சசியின் சிறை வாழ்க்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
ஓராண்டு நிறைவடைந்தது
சசியின் சிறை வாழ்க்கை

சென்னை : சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா


இன்னும், 1,095 நாட்கள், சசிகலா சிறையில் இருக்க வேண்டும்.ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை, முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல், நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, தனி நீதிபதி, குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.

இதைஎதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2016 டிச., 5ல், ஜெ., மறைந்தார். அவர் மறைவுக்கு பின், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, முதல்வர் ஆக, சசிகலா முயற்சித்தார். இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.

அதில், 'நான்கு பேரும், கூட்டு சதி செய்து, ஜெ., பொது ஊழியராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர்.ஜெ., குற்றம் புரிவதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் துாண்டுதலாக இருந்தனர்' என, கூறப்பட்டது.
எனவே, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம், 2017 பிப்., 14ல் உறுதி செய்தது.

Advertisement

இந்த தீர்ப்பு வெளியான மறுநாள், பிப்., 15ம் தேதி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் சிறை வாசம், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. மூன்று பேரும், இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது, 1,095 நாட்கள், சிறையில் இருக்க வேண்டி உள்ளது.சசிகலா சிறைக்கு சென்றபோது, 'இன்னும் சில தினங்களில், அவரை வெளியில் கொண்டு வந்து விடுவோம்' என, கூறிய உறவுகள், இப்போது, 'கப்சிப்'பாக உள்ளன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
16-பிப்-201821:26:02 IST Report Abuse

balஎன்னவோ காந்தி தண்டி யாத்திரையில் சிறை சென்று ஒரு வருடம் ஆவது போலும். எப்போ வெளியில் வருவார் என்று காத்துக்கொண்டிருப்பது போல் ஏன் செய்தி தருகிறீர்கள். இவர்கள் என்ன தியாகியா. தயவு செய்து நல்ல செய்தி மட்டும் போடுங்கள்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:30:38 IST Report Abuse

Mani . Vஇந்த செய்தியை பார்த்து விட்டு இந்த "மங்குணிகள்" எம்ஜியார் நூற்றாண்டு விழா கொண்டாடியது மாதிரி "சசிகலா சிறை சென்ற ஓராண்டு நிறைவு விழா" என்று மக்களின் வரிப் பணத்தில் பகட்டு விழா கொண்டாடி தொலைத்து விடப்போகிறார்கள்.

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-பிப்-201822:15:50 IST Report Abuse

Ramamoorthy Pகொண்டாடுங்கள் வெடி வெடித்து.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201819:19:10 IST Report Abuse

Pugazh Vஓராண்டு சிறை கண்ட செம்மல் என்று போட்டு இவர் படத்தை சட்ட மன்றம் பள்ளிக்கூடங்களில் திறக்கவும். பிஜேபி தலைவர்கள் பாராட்டுவார்கள். மோ__ யால், தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கப்பட்ட தலைவியாச்சே

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
15-பிப்-201818:55:47 IST Report Abuse

Tamilnesan பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்........இந்தியாவில் உச்ச நீதிமன்றம் என்கிற அமைப்பு உள்ளதா.......அதையும் சசி கும்பல் பெனிக்ஸ் மால் போல விலைக்கு வாங்கி விட்டதா..........

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201818:17:40 IST Report Abuse

GB.ரிஸ்வான் நீ அங்கயே இரு....தமிழகத்துக்கு வராத காவேரியை போல... மோடிஜி தேர்தல் பிரச்சாரத்துக்கு அங்கே வருவார் மீண்டும் ஒருமுறை உன் தலையில் கை வைத்து ஆசிர்வாதிக்கட்டும் இன்னும் உன் ஆயுட்காலம் முடிய அங்கே இரு வேற வேற வழக்கில் சிக்கி அவசத்தை படு, . யாருக்காக இதெல்லாம்... உன்னால் வரவழைக்கப்பட்டவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்கள் இங்கே, ஆனால் நீ சிறையில் எதற்கு இந்த பணம்.. என்ன சாதித்தாய் ?

Rate this:
ram - chennai,இந்தியா
15-பிப்-201818:13:57 IST Report Abuse

ramசசிகலாவின் சிறை வாழ்க்கை இப்டியே தொடர்ந்தால் தமிழக மக்களுக்கு நல்லது

Rate this:
anne - chennai,இந்தியா
15-பிப்-201817:52:19 IST Report Abuse

anneathukkulaam aayul thandanai kodukkanum...

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
15-பிப்-201817:10:21 IST Report Abuse

Kurshiyagandhiவெளில மட்டும் விட்டுடாதீங்க..............தமிழகம் ஏற்கனவே தத்தளிக்கிறது..இது வந்தா அவ்வளவு தான்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-பிப்-201816:00:46 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக் நாட்டுக்கு அருள் செய்த, தியாகம் செய்த தியாகத்தலைவி சின்னாபின்னமான சதிகாரி வாழ்க வாழ்க வாழ்க இதைப்போல பல சின்னாபின்னமான அம்மாக்கள் உருவாக டாஸ்மாக் நாtடு மக்கள் தினமும் டாஸ்மாக் கடை வாசலில் தவம் இருக்கவேண்டும்.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement