கட்சிக்கு பெயர் என்ன: கமல் ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சிக்கு பெயர் என்ன:
கமல் ஆலோசனை

அரசியல் பயணம் குறித்தும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும், நடிகர் கமல், சென்னையில், நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

கட்சிக்கு பெயர் என்ன: கமல் ஆலோசனை


தமிழக அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரை விமர்சித்து வந்த கமல், புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். பின், ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி, கலாம் வீட்டில் இருந்து, பிப்., 21ல், தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குச் சென்ற கமல், 'இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை' என, அறிவித்தார். சென்னை திரும்பியதும், அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் கட்சிப் பணிகள் தொடர்பாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், மன்ற நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், புதிய கட்சிக்கு, 'மக்கள் கட்சி' என, பெயரிட்டு இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.கட்சியின் பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கப்பட்டது.

மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்த பின், அதை பதிவு செய்வதற்கான பணிகள் துவங்கப்படும் என, தெரிகிறது.

Advertisement

.மேலும், கட்சிக் கொடி வடிவமைப்பு, சுற்றுப்பயண அட்டவணை, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்தும், நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவரது சுற்றுப்பயண விபரம், 18ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது

நடிப்புக்கு முழுக்கா?

மன்ற நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்திய பின், கமல் அளித்த பேட்டி: முழு நேர அரசியலுக்கு வந்த பிறகே, நடிப்பை தொடர்வது குறித்து, முடிவு எடுக்கவுள்ளேன். தற்போது, மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய, டில்லி செல்லும் திட்டம் இப்போதைக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
15-பிப்-201822:47:05 IST Report Abuse

balஎல்ல காட்சிகளிலும் ஓர் திராவிடம், ஒரு முன்னேற்றம், ஒரு கழகம் பெயர் இருக்கதான் செய்யும். மக்கள் குழப்பமடைந்து விடுமாறு பெயர் இருக்க வேண்டும். கமல் முன்னேற்ற கழகம்...KMK ஹொவ் ஐஸ் இட்?

Rate this:
venkat -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201820:37:53 IST Report Abuse

venkatக மலக் கட்சி

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201820:01:41 IST Report Abuse

Kuppuswamykesavanகலவையர் முன்னேற்ற கழகம் (கமுக)?.

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201818:36:46 IST Report Abuse

Ravichandranஇச் இச் தமிழன்பனார் கழகம். இந்த பேரு ஓ கே வா ஜி.

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201818:34:50 IST Report Abuse

Ravichandranமௌத் கிஸ் முன்னேற்ற கழகம். உங்க குணத்துக்கு ஏற்ற பெயர்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-பிப்-201816:14:28 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக் நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று பீலா விட்டுட்டு, சினிமாவை விட்டுவிட்டு இந்த மாதிரி கட்சி ஆரம்பித்தால் டாஸ்மாக் நாடே கதி என்று இருக்க வேண்டுமே, பரவாயில்லையா வாணி சரிகா கவுதமி கமலே .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-பிப்-201816:09:20 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக் நாட்டு திராவிட கழகம். அதன் லோகோவில் ஒரு பக்கம் Virgin ஆயீஷா இன்னொரு பக்கம் Virgin மேரி அதன் கொள்கை. 1 ) யாருடன் வேண்டுமானாலும் யாரும் இணைந்து இருக்கலாம் 2 ) இந்து விரோத கழகம் அல்ல ஆனால் இந்துக்களும் நல்லவர்களே முஸ்லிம்களைப்போல, கிறித்துவர்களைப்போல 3 ) புடவை, பணம், கூப்பாடு எனபதே எமது மூன்று முக்கிய கொள்கை.

Rate this:
15-பிப்-201815:19:31 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கமல் திராவிட முன்னேற்ற கழகம் ( KDMK ) இதில் உங்கள் கொள்கை , கட்சி தொடங்கிய நோக்கம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-பிப்-201813:51:48 IST Report Abuse

raghavanமகள்கள் நல கட்சி என்று பெயரிட்டு ஸ்ருதி , அக்ஷரா படத்தை போட்டு கொடி விட்டால் கொஞ்சம் தாய்குலத்தின் வோட்டு கிடைக்கலாம்.

Rate this:
15-பிப்-201815:16:46 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சுருதியும் , அக்ஷராவும் தற்போது கவர்ச்சி நாயகிகள் , ஜொள்ளு பட்டாளம் ஓட்டு போடும்....

Rate this:
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
15-பிப்-201813:31:50 IST Report Abuse

Mohammed Abdul Kadarமக்கள் மனித நேய கட்சி என பெயரிடலாமே

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement