மூன்றாம் பாலினம் என்பதால் பணி மறுப்பு; கருணை கொலை கோரி கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் பாலினம் என்பதால் பணி மறுப்பு; கருணை கொலை கோரி கடிதம்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மூன்றாம் பாலினம் என்பதால் பணி மறுப்பு; கருணை கொலை கோரி கடிதம்

புதுடில்லி: மூன்றாம் பாலினத்தவர் என்பதால் ஏர் இந்தியா நிறுவனம் பணி வழங்க மறுத்துள்ளதாகவும், இதனால் தான் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்ய கோரி தமிழகத்தை சேர்ந்த ஷனாவி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் ஷனாவி பொண்ணுசாமி, இவர் மூன்றாம் பாலினத்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியானார். பின் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்து கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் ஆக சுமார் 13 மாதம் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறினார். மேலும் தனது பெயரையும், பாலினத்தையும் தமிழக அரசு விதிப்படி கெஸட்டில் பதிவும் செய்துள்ளார்

இந்நிலையில் அவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் கேபின் க்ரூ பணிக்காக விண்ணப்பித்தார். அவர் கடந்த 4 முறை விண்ணப்பித்தும் இறுதி பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து விசாரித்த போது. இந்த பணி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இவருக்கு அந்த பணி கிடைக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு தொடர்ந்தும் பதில் வரவில்லை.

இந்நிலையில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‛‛ தான் மாற்று பாலினத்தவர் என்பதால் ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு பணி வழங்க மறுத்து எனது அடிப்படை உரிமையை மறுத்துள்ளது. அரசு நிறுவனமான ஏர் இந்தியாவே எனக்கு பணி மறுத்தால் மற்ற தனியார் நிறுவனங்களில் என் கதியை சொல்லி தெரியவேண்டியதில்லை. தற்போது நான் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு வருகிறேன். எனது தின உணவுக்கான செலவுக்கே திண்டாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201819:38:32 IST Report Abuse
SALEEM BASHA Irukkuratha uttuttu parakka aasaipadakoodaadu
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:14:48 IST Report Abuse
Sanny அவங்க திறமைக்கு அவங்க வேலை தேடுறாங்க....
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
15-பிப்-201819:25:39 IST Report Abuse
P. Kannan நல்லா பிறக்கிறவனுக்கே இங்கே வேலை கொடுக்க மாட்டேன் என்கிறான், இன்னோம் இங்கே உங்கள் பாலினத்தவரை பற்றிய புரிதல் யாருக்குமே இல்லையே, பின் ஏன் முறையீடு, பேசாம சிவனை நோக்கி தவமிரு , அவருதான் உங்க ஆளு ஏதாவது வழியை காட்டுவார்.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201817:56:49 IST Report Abuse
GB.ரிஸ்வான் உங்களிடம் பணம் இருந்தால் பணி..... இல்லையா கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் இது தான் அரசியல்வாதிகளின் அரசு வேலைகளில் எழுதப்பட்ட விதி.... புலம்பி பயனில்லை ..இருந்தாலும் உங்களுக்கு இறைவன் நல் வழியை ஏற்படுத்தி தருவான்...
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-பிப்-201816:02:16 IST Report Abuse
vnatarajan இவர் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் கஸ்டமர் சப்போர்ட் எக்சிகியூடிவ் வேளையிலேயே நீடிக்கலாம் அவர் அவருடைய வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படவேண்டிய தேவையில்லையே .
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
15-பிப்-201816:00:11 IST Report Abuse
makkal neethi வேலைக்கான கல்வி தகுதி இருக்கும்போது பாலினம் பார்க்காமல் வேலை கொடுப்பதில் தவறேதும் இல்லையே
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
15-பிப்-201815:54:01 IST Report Abuse
Arivu Nambi இந்த செயற்கை பெண்ணுக்கு ஏர் இந்தியா நிறுவனம் இயற்க்கை ,பெண்ணாகவே நினைத்தாலும் வேலை கொடுத்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் கிடையாது ,இந்த வேலைக்கு உங்களின் தகுதி போதாது என்று காரணம் கூறியிருக்கலாம் ,அதைவிடுத்து குசும்பாக மறுப்பு கடிதம் அனுப்பியது தான் தவறு .தவளை தன்வாயால் கெட்டுள்ளது. தவளைக்கு கண்டனம் தெரிவிக்கலாம் . ஆனால் செயற்கையின் பிடிவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ,எல்லோரையும் முட்டாள்கள் என்று நினைத்து ஜனாவுக்கு கடிதம் எழுதியுள்ளது அவருடைய முட்டாள்தனம் ,,வேறு வேலை தேடி செல்வதுதான் நாகரீகம் .உங்களின் செயற்கையை காரணம் கூறி முறையற்றவகையில் பயன் பெற நினைப்பது தவறு .
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:19:37 IST Report Abuse
Sanny தனது தகுதிக்கு வேலை தேடுவதில் தவறில்லையே, உலகில் பல விமான பணிப்பெண்கள் மூன்றாம் பாலினமாக இருக்கிறார்கள். ஒருவரின் உருவத்தை பாராதீர்கள். அவன் திறமையை பாருங்க. இன்று உலகில் மகப்பேறு வைத்தியத்தில் மூன்றாம் பாலினத்தவர்களே திறமையாக இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
15-பிப்-201813:42:48 IST Report Abuse
Mohammed Abdul Kadar அவருடை பேச்சும் பெண் போல் இருப்பதால் வேலை கொடுக்கலாமே ,இந்த அரவாணி பெண்ணுக்கு
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
15-பிப்-201811:46:26 IST Report Abuse
Syed Syed டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் இவர்களுக்கு பங்கில்லையா. என்னடா இது கொடுமை .
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:20:52 IST Report Abuse
Sanny அண்மையில் மூன்றாம் பாலினத்தை இந்தியா அங்கீகரித்ததே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
15-பிப்-201811:29:19 IST Report Abuse
Srinivasan Rangarajan இவர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளை விட்டுவிட்டு முன்னர் பார்த்த வேலையோ அல்லது பொதுவான வேலைகளுக்கோ முயற்சி செய்யலாமே இது போன்று navy யிலும் சமீபத்தில் நடந்தது. ஆணில் இருந்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டவருக்கு அவர் முன் செய்த பணி(ஆண்களுக்கானது) இல்லாமல் வேறு பணி தரப்பட்டது
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:21:47 IST Report Abuse
Sanny உலகில் டிஜிட்டலாக வரவேண்டும் என்ற நாடுகள் அப்படி செய்வதில்லை....
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:28:27 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இது குறித்து வழக்கு தொடர்ந்தும் பதில் வரவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளார். எனது தின உணவுக்கான செலவுக்கே திண்டாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். சீவாமணிங்களா இந்த அம்மையார் காங்கிரஸோட செட்டப்பா ஈக்குமே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை