அழகப்பா பல்கலைக்கு கவுரவம் : யு.ஜி.சி., முதல் தர வரிசையில் இடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா பல்கலைக்கு கவுரவம் : யு.ஜி.சி., முதல் தர வரிசையில் இடம்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அழகப்பா பல்கலைக்கு கவுரவம் : யு.ஜி.சி., முதல் தர வரிசையில் இடம்

காரைக்குடி : பல்கலை மானியக்குழு எனும், யு.ஜி.சி., தர வரிசை பட்டியலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை முதலிடம் பெற்றுள்ளது.
பட்டியல் : மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அறிவுறுத்தலின்படி, மொத்தம் உள்ள, 819 பல்கலைகளை, கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம், செயல்பாட்டு திறன் அடிப்படையில் மூன்று வகையாக, யு.ஜி.சி., தரப்படுத்தியுள்ளது. இந்த பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தர வகையில், 32 பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலையும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து, துணைவேந்தர், சுப்பையா கூறியது: தேசிய தர மதிப்பீட்டு குழுமத்தின் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பீட்டு புள்ளி அடிப்படையில் பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 3.5-க்கு மேல் எடுத்த பல்கலைகள் முதல் தர வகைக்கு தகுதி பெற்றுள்ளன. அழகப்பா பல்கலை 3.64 புள்ளி எடுத்துள்ளது.இந்த அங்கீகாரம் மூலம் புதிய துறை, மையங்கள், பாடப்பிரிவுகளை பல்கலை தானாகவே தொடங்க முடியும். புதிய ஆராய்ச்சி பூங்காக்கள், இன்குபேஷன் மையங்கள், தனியாருடன் இணைந்து புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு, யு.ஜி.சி.,யின் அனுமதி தேவையில்லை.
20 சதவீதம் : பன்னாட்டு அறிஞர்கள், பேராசிரியர்களை பணி அமர்த்தி கொள்ளலாம். வெளிநாட்டு மாணவர்கள், 20 சதவீதம் வரை சேர்த்து கொள்ளலாம். பல்கலை வளாகம் தவிர, புற வளாக மையங்களை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திறமையான ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். உலகத்தரம் வாய்ந்த, 500 வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201812:11:18 IST Report Abuse
Muthu இந்த யு.ஜி.சி., தர வரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றதை நினைத்து பெருமை அடைகிறேன் அந்த மண்ணில் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்.பல்கலை கழகத்திற்கு பெருமை சேர்த்த துணை வேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவர்க்கும் கோடானகோடி நன்றிகள் .. கல்வித்தந்தை..கோடி கொடுத்த கொடைங்கனுக்கு குவியட்டும் புகழ் மாலைகள்
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-பிப்-201810:59:33 IST Report Abuse
Rahim எங்கள் செட்டிநாட்டு சீமையின் பெருமை சொல்லும் அழகப்பா பல்கலைக்கு கிடைத்த இந்த பெருமையை எண்ணி மிக்க மகிழ்சி அடைகிறேன் , காரைக்குடியில் வாழ்வதை பாக்கியமாக கருதுகிறேன், இந்த பெருமைக்கு பாடுபட்ட நிரவத்தினர், துணைவேந்தர், பேராசிரிய பெருமக்கள், மற்றும் மாணவ செல்வங்கள் அனைவர்க்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
iyer naagarazan - Chennai,இந்தியா
15-பிப்-201806:47:46 IST Report Abuse
iyer naagarazan பல்கலைக்கழகங்கள் லஞ்ச லாவண்யத்தில் திளைத்த செய்திகள் நடுவே அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பொடு செயல் படுவது பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது. .அழகப்பா அவர்கள் செய்த தியாகம் நல்ல பலனை தருகிறது. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-பிப்-201803:51:30 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அங்க போடோனி பாடம் சொலி தருவீங்ளா
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-பிப்-201811:01:19 IST Report Abuse
Rahimமனமகிழ்வோடு சுவையான செட்டிநாட்டு பலகாரங்கள் செய்து தருகிறோம் வாருங்கள் சகோதரி.........
Rate this:
Share this comment
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-பிப்-201813:52:27 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதிநீங்க உங்க தா என்னய்ய கூட கூப்புட்டூ வச்சிருக்கீங்க. இங்கல்லம் யாருமே கூப்புடா மாட்டங்கா. செட்டீ நாட்டுக்காரவுங்கல்லம் எல்லாருமே நல்லவுங்களா மட்டுமா இருகாங்க. நா விசா வாங்கிட்டு லீவுக்கூ வந்துவச்சிருவே. இந்த அண்ணா நல்ல அண்ணவா இருக்காங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை