பிரதமர் புறக்கணிப்பா? : ஜெயகுமார் விளக்கம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் புறக்கணிப்பா? : ஜெயகுமார் விளக்கம்!

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரதமர் புறக்கணிப்பா? : ஜெயகுமார் விளக்கம்!

சென்னை: ''ஜெ., படத் திறப்பு நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடியை அழைக்கவில்லை,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் திறக்கப்பட்ட விழாவிற்கு, பிரதமர் ஏன் வரவில்லை; ஜனாதிபதி ஏன் வரவில்லை என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கேட்டுள்ளார். யாரை, எப்போது, எப்படி அழைக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அவர்கள் கற்றுத் தர வேண்டியதில்லை. சட்டசபையில், எம்.ஜி.ஆர்., படத்தை, 1992ல், ஜெ., திறந்து வைத்தார். ஜெ., படத்தை, சபாநாயகர் திறந்து வைத்துள்ளார். பிரதமர், ஜனாதிபதி, கவர்னரை, நாங்கள் அழைக்கவில்லை; அதனால், அவர்கள் வரவில்லை.மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு, அரசியல் கட்சிகள், கொள்கைகள் வகுத்து, மக்கள் முன் வைக்கின்றன. அதை ஏற்றுக் கொண்டால், மக்கள் அங்கீகாரம் வழங்குகின்றனர். அந்த வகையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு, மக்கள் அங்கீகாரம் கொடுத்தனர். வருங்காலத்திலும் இந்த மண்ணில், ஜெ., ஆட்சி தான் மலரும். தி.மு.க., ஆட்சியில் தான், போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது. போக்குவரத்துக் கழகம் தொடர்பாக, முதல்வரிடம் அறிக்கை அளிக்க, ஸ்டாலின் அனுமதி கேட்டார். அரசியல் பண்பாட்டை காக்க, அவரை அழைத்து பேசினோம்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:40:40 IST Report Abuse
Mani . V "ஐயய்யோ, 'பிரதமர் புறக்கணிப்பு' என்று செய்தி போட்டு எங்கள் முதலாளியை கோபப்படுத்தி விடாதீர்கள். (ஆதவன் திரைப்படத்தில் வடிவேல் படகில் காமெரா இருப்பதாக நினைத்து எல்லா பக்கமும் பார்த்து சொல்வது மாதிரி), ஐயா, நாங்கள் உங்கள் அடிமைகள். நாங்கள் உங்களை புறக்கணிக்கும் அளவுக்கு தைரியமானவர்கள் இல்லை. பேப்பரில் போட்டிருக்கும் செய்தியை நம்பி விடாதீர்கள்".
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
16-பிப்-201800:30:01 IST Report Abuse
TamilReader AIDMK ஒழிவதற்கு இவர் ஒருவரே போதும்
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
15-பிப்-201818:10:39 IST Report Abuse
ram பிரதமர் கூப்பிடவே இல்ல..
Rate this:
Share this comment
Cancel
M GANESAN - CHENNAI,இந்தியா
15-பிப்-201811:54:35 IST Report Abuse
M GANESAN எல்லா அரசியல் வாதிகளும் ரொம்ப யோக்கியமான ஆட்களா பேச வந்திட்டார்கல் நீங்கேள்ளும் நினைக்கிற மாதிரி ஜெயா இல்லை. பாவம் சதிகார கும்பல் கிட்ட மாட்டிகிட்டார். இன்று இல்லை என்றுமே ஜெயா தான் பெஸ்ட். தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201811:09:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்ன கேவலம்டா..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201810:07:12 IST Report Abuse
ஆரூர் ரங் அம்மணி படமென்பதால் ராகுலை திறக்க கூப்பிட்டிருக்கலாம். கட்டாயம் வந்திருப்பார்.. ஊழல்வழக்கு பற்றி நன்கு தெரிந்தும்தானே அப்போலோவுக்கு சென்றுபார்த்தார்? இப்போது கூட்டாளியான திமுகவோடு சேர்ந்து எதிர்ப்பதேன்?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:39:47 IST Report Abuse
Srinivasan Kannaiya வருங்காலத்திலும் இந்த மண்ணில், ஜெ., ஆட்சி தான் மலரும்...அப்போ ஊழல் ஆட்சிதான் இருக்கும் என்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
15-பிப்-201808:46:43 IST Report Abuse
Varun Ramesh 'தி.மு.க., ஆட்சியில் மட்டும் தான், போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது', என்ற உங்களது உண்மையை(?) ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். தி.மு.க வால் ஏற்பட்ட சீர்கேட்டை சரி செய்துவிடுவதாக கூறித்தானே நீங்கள் பதவிக்கு வந்தீர்கள். 2011 லிருந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகியும் உங்களால் எதையும் சரி செய்ய இயலவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Dr.Vasan - GEORGIA Atlanta ,யூ.எஸ்.ஏ
15-பிப்-201808:45:50 IST Report Abuse
Dr.Vasan ..பிரதமர், ஜனாதிபதி, கவர்னரை, நாங்கள் அழைக்கவில்லை அழைத்தும் வர மறுத்தனர்...என்பதுதான் பட்ட வர்தனமான உண்மை...
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
15-பிப்-201809:54:04 IST Report Abuse
kandhan.ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் முதன்மை குற்றவாளி என்று நீதி மன்றமே கூறியும் ஜெயா அம்மையாரை வைத்து அரசியல் செய்வது சரியா ??இதுதான் இவர்களின் பணநாயகமா ???ஜனநாயகம் செத்துவிட்டதா ??அரசு நிர்வாகத்தை யார் சரிசெய்வது ???? கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
15-பிப்-201806:57:15 IST Report Abuse
Amirthalingam Sinniah வருவதென்றால் எவ்வளவு செலவாகும் என்பதை நினைத்து பார் தீ ர் களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை