ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம் அனுமதி கோரி வழக்கு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பிறந்த நாள் கூட்டம் அனுமதி கோரி வழக்கு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சசி ஆதரவாளர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை, வரும், ௧௯ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சசி ஆதரவாளரான, என்.ஜி.பார்த்திபன் தாக்கல் செய்த மனு: ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை, வேலுாரில், ஸ்ரீகிருபா வணிக திடலில், வரும், ௨௪ம் தேதி நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. வேலுார், எஸ்.பி., மற்றும் வேலுார் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். இதே இடத்தில், பல முறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனால், எந்த இடையூறும் ஏற்படவில்லை.பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டு, முன்பே விண்ணப்பித்தாலும், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இழுத்தடித்து, கடைசி நிமிடத்தில், அனுமதி மறுப்பது வழக்கமாகி விட்டது. அதிகாரிகளும், நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். நான் அளித்த மனுவுக்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், யு.எம்.ரவிச்சந்திரன் வாதாடினார். மனுவுக்கு, போலீஸ் தரப்பில் விளக்கம் பெறும்படி, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௧௯ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை