'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்... எப்போது? நீலகிரி மாணவ, மாணவியர் காத்திருப்பு| Dinamalar

தமிழ்நாடு

 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்... எப்போது? நீலகிரி மாணவ, மாணவியர் காத்திருப்பு

Added : பிப் 15, 2018
Advertisement

ஊட்டி:நீலகிரி மாவட்ட மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை முன்கூட்டியே வழங்க, தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மருத்துவம், இன்ஜினியரிங் உட்பட துறைகளில் இணைவோரின் எண்ணிக்கை மிக குறைவு.சமவெளி பிரதேசங்களில் உள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் மற்றும் போட்டி தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு, நிகராக நீலகிரி மாவட்ட மாணவ, மாணவியரால் போட்டியிட முடிவதில்லை என்பது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில்,'நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்து, பள்ளிகள் தோறும், மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, பாட வாரியான ஆசிரியர்கள்,
வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று, மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். ஆனால், 'அப்பயிற்சியால் மாணவர்களுக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை' என, கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கணிதம், இயற்பியல், வேதியியல் என, 'நீட்' தேர்வில் வரும் பாடப்பிரிவுகள் சார்ந்த ஆசிரியர்கள், ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
ஆனால், அந்த ஆலோசனைகள் பாடம் சார்ந்து உள்ளதே தவிர, போட்டி தேர்வில், அப்பாடம் சார்ந்த கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நிபுணத்துவம் அப்பயிற்சியில் இல்லை. பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கு, அதுசார்ந்த அனுபவம் குறைவு, என்பது தான் அதற்கு காரணம்.எனவே, முதலில், பயிற்சி வழங்கவுள்ள ஆசிரியர்களுக்கு 'நீட்' தேர்வு, அதில் வரும் கேள்விகள், அதை எதிர்கொள்ளும் விதம் குறித்த ஆழமான பயிற்சியை வழங்கி,
பின் பள்ளிகள் அளவில் பயிற்சி வழங்கினால், அரசின் நோக்கம் நிறை வேறும். இவ்வாறு,
ஆசிரியர்கள் கூறினர்.

சுய சிந்தனை உயர வேண்டும்...

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறியதாவது:பள்ளிகளில் வழங்கப்படும் அடிப்படை கல்வி யில், மாணவ, மாணவியருக்கு, புத்தகங்களை படித்து, அதில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறையே நடைமுறையில் உள்ளது; ஆனால், 'நீட்' தேர்வை எதிர்கொள்ள கற்பனை வளம், சுய சிந்தனை உள்ள கல்வி அவசியம்.

அந்த வகையில், பள்ளிகள் அளவில் 'நீட்' தேர்வுக்குரிய பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கு, அதற்கான அனுபவம் மற்றும் திறமை குறைவாகவே உள்ளது; அவர்கள் வழங்கும் பயிற்சியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், கற்பிக்கும் திறன், மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளது.
எனவே, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள், அதற்கேற்ப தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவ, மாணவியரின் சுய சிந்தனையை வளர்க்கும், செயல் வழிக் கற்றல் முறையை, 10ம் வகுப்பு வரை விரிவுப் படுத்தினால் மட்டுமே, நீட் பயிற்சி, நன்மை
பயக்கும்.இவ்வாறு, மனோகரன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை