அனிதா குப்புசாமி திடீர் விலகல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனிதா குப்புசாமி திடீர் விலகல்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அ.தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்த, பிரபல நாட்டுப்புறப் பாடகி, அனிதா குப்புசாமி, நேற்று, அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க.,வில் இருந்து, அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். ஜெ., வற்புறுத்தி அழைத்ததால், அ.தி.மு.க.,வில் இணைந்தேன்; ஜெ., இல்லாததால் விலகி விட்டேன். எனக்கு, தற்போது இருப்பவர்களின் தலைமை பிடிக்கவில்லை.தற்போதைய முதல்வர், மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. கருணாநிதி, ஜெ., போல், மக்களுக்காக எதையும் செய்யவில்லை. பிற கட்சியில் இணையும் எண்ணம் இல்லை. அரசியலில் இருந்து விடுபட்டால் போதும் என, நினைக்கிறேன்.என் கணவருக்கு, அரசு இசைக் கல்லுாரி துணைவேந்தர் பதவி கிடைக்காததற்கும், நான், அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது.என் கணவருக்கு, துணைவேந்தர் பதவி கேட்டது உண்மை. ஆனால், அது தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன், கட்சியிலிருந்து விலகுவதாக, என் முகநுாலில் அறிவித்தேன். அது, பலருக்கும் தெரியாததால், தற்போது, வெளிப்படையாக அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
15-பிப்-201818:13:12 IST Report Abuse
ram யார் போனாலும் அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கும்
Rate this:
Share this comment
Cancel
anne - chennai,இந்தியா
15-பிப்-201817:51:27 IST Report Abuse
anne padhavi kedaikkalanu virakkthila pesittu thiriyuthu...
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
15-பிப்-201815:28:29 IST Report Abuse
Baskar நாட்டுப்புற பாட்டினால் இவர்கள் புகழ் பெற்றார்கள்.அண்ணா தி.மு.க வினால் இவர்கள் புகழ் பெறவில்லை. இவர்கள் யார் என்றே தெரியாது கட்சியில் உள்ள சிலருக்கு.இன்று கணவனுக்கு பதவி கொடுக்கவில்லை இவர் கேட்ட காண்டராக்ட் கொடுக்கவில்லை.அந்த கோபத்தில் கணவனும் மனைவியும் பிதற்றுகின்றனர்.இவர்கள் பதவிக்கு ஆசை படுபவர்கள் என்று தெரிகின்றது.இவர்கள் போனால் அண்ணா தி.மு.க அழிந்து விடாது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
15-பிப்-201811:15:11 IST Report Abuse
Srinivasan Rangarajan ஊரு விட்டு ஊரு வந்து...(அனிதா ராஜஸ்தானை சேர்த்தவர் என நினைக்கிறேன்) உள்ளூர் அரசியலிலும் தலையிட்டு பின்னால் அதில் கோஷ்டியிலும் (தினகரன்) ஈடுபட்டு இப்போ புருஷனுக்கு போஸ்ட் (துணை வேந்தர்) இல்லையேன்னு புலம்பலாமா அம்மணி ..கொடுக்கலேன்னு சந்தோஷப்படு..வாழ்க்கையில் நிம்மதிதான் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
15-பிப்-201810:32:19 IST Report Abuse
Vilathur Nandhiyar அனிதா குப்புசாமி திடீர் விலகல் ....அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி .....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201810:02:13 IST Report Abuse
ஆரூர் ரங் பேராசிரியராகக்கூட இருந்த அனுபவமில்லாத புஷ்பவனம் குப்புசாமி துணைவேந்தராக ஆசைப்படுவது வேடிக்கை. கட்சிப்பணிக்கு விலையோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-201808:05:22 IST Report Abuse
Bhaskaran கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவி உட்பட பல துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளது அதில் இவருக்கு பொருத்தமான பதவி ஒன்றைக் கொடுத்து கட்சியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் இவரைப்போல் மிகத்திறமையான கட்சியின் தொண்டர்களை இடைப்பாடி இழந்துவிடக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
15-பிப்-201805:54:41 IST Report Abuse
Renga Naayagi She was difference with her husband also ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை