வளைவுகள் நிமிருமா? கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில்... டூ விபத்தை தவிர்க்க திட்டமிடல் அவசியம்| Dinamalar

தமிழ்நாடு

வளைவுகள் நிமிருமா? கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில்... டூ விபத்தை தவிர்க்க திட்டமிடல் அவசியம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில், 20.63 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்ல வசதியாக இல்லை என அதிருப்தி எழுந்துள்ளதால், புறவழிச்சாலை அமைப்பதன் நோக்கமே பாதிக்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் நகரமான பொள்ளாச்சியில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சனை
யாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து கோவை வழியே திண்டுக்கல்லை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி நகரின் வழியே அமைந்துள்ளது.
இந்த ரோட்டில் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், நகருக்குள் நுழைந்து வெளியேறுகின்றன. இவற்றுடன் உள்ளூர் வாகன போக்குவரத்தும் இணையும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், நகருக்குள் நுழையாமல் வேறு வழியில் செல்ல, புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கோவை ரோட்டையும், உடுமலை ரோட்டையும் கிராமங்கள் வழியே இணைக்கும் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் இருந்து, குள்ளக்காபாளையம், சடையகவுண்டன்புதுார், தொப்பம்பட்டி, ஆலாம்பாளையம், அனுப்பர்பாளையம், திப்பம்பட்டி வழியே உடுமலை ரோட்டை அடையும் வகையில் இந்த புறவழிச்சாலை திட்டமிடப்பட்டது.
இந்த புறவழிச்சாலை, கோவை ரோடு,
பல்லடம் ரோடு மற்றும் உடுமலை ரோடு ஆகியவற்றை இணைப்பதால்
மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால், திருப்பூர், காங்கயம், வெள்ள
கோவில் உள்ளிட்ட பகுதி
களில் இருந்து வரும் வாகனங்களும் நகருக்குள் நுழைவது தவிர்க்கப்படும்.
நெடுஞ்சாலைத்துறை மூலம், 15 கி.மீ., நீளத்துக்கு, 20.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பணி துவங்கப்பட்டது.
கிழக்கு புறவழிச்சாலை அமைக்க, 18 மாதங்கள் ஒப்பந்த காலம் வழங்கப்பட்டது. பணி துவங்கி, 11 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 95 சதவீத பணி நடந்துள்ளது. அதிகாரபூர்வமாக ரோடு திறக்கப்படாவிட்டாலும், வாகனங்கள் பயணிக்கின்றன.
ஆனால், பெரிய கண்டெய்னர் வாகனங்கள், கனரக லாரிகள், சரக்கு ஏற்றிய வாகனங்கள் இந்த ரோட்டில் பயணிப்பதை தவிர்க்கின்றன. வழக்கம் போல் நகருக்குள் நுழைந்தே பயணத்தை தொடர்கின்றன.
இந்த திட்டத்தில்,
ஏழு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள புற
வழிச்சாலையில், 11 இடங்களில் பெரிய வளைவுகள் உள்ளன. சில இடங்களில் வால்பாறை மலைப்பாதையில் இருப்பது போன்று அதிக 'எஸ்' வளைவுகளும் உள்ளன.
இந்த வளைவுகளில் அதிக நீளமான வாகனங்கள் திரும்புவது ஆபத்தானதாகவும், கடினமானதாகவும் உள்ளது.
வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைத்து, மிகுந்த கவனத்துடன் திருப்ப வேண்டியுள்ளது. அதிக எடையுடன் வரும் கனரக வாகனங்கள் வளைவுகளில் கவிழும் அபாயமும் உள்ளது.
பல்வேறு கிராமத்து ரோடுகளை இணைத்து, புறவழிச்சாலை அமைக்கப்
படுவதால், வழித்தடத்தில் குழப்பங்களும் உள்ளன. புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழியை கண்டறிவது கடினம். இரவு பயணத்தில் வழி மாறும் நிலையும் உள்ளது.
வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் இன்னும் அமைக்கப்படவில்லை.
இதனால், வாகன ஓட்டுனர்கள் கிழக்கு புற
வழிச்சாலையை தவிர்த்து, வழக்கம் போல நகருக்குள் நுழைந்து செல்வதை தொடர்கின்றனர். போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை. புழவழிச்சாலை திட்டத்தின் நோக்கம் பாழாகி வருகிறது.

திட்டமிட்டால் நல்லது!
பொது நல அமைப்பினர் கூறுகையில், 'தற்போது அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலைக்காக தனியார் பலரிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரியாக திட்டமிட்டிருந்தால், முன் கூட்டியே கூடுதல் நிலம் வாங்கி, வளைவுகளை குறைத்திருக்கலாம். திட்டம் பயனற்று போவதை தவிர்க்க, மேற்கொண்டு நிலம் எடுப்பு செய்து, வளைவுகளை சீரமைக்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட வேண்டும். சரியாக திட்டமிட்டால், மீதமுள்ள ஏழு மாதங்களில் ரோட்டை சிறப்பாக மாற்றியமைக்கலாம்,' என்றனர்.

கூடுதல் நிதி வேண்டும்!

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே இருந்த கிராமத்து ரோடுகளை அகலப்படுத்தியும், மேம்படுத்தி இணைத்தும் புறவழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், வளைவுகளை தவிர்க்க முடியவில்லை. இதற்கு மேல் நிலம் எடுப்பு, வளைவுகளை அகற்றுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியும், அரசு அனுமதியும் தேவை. அதிகாரிகள் மட்டத்தில் எதுவும் செய்ய இயலாது. திட்டத்தில் மாற்றம், கூடுதல் நிதிக்கு அரசு தரப்பில் தான் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X