மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தவிப்பு...! மருந்துபெட்டி,சிலிண்டருக்கு மரியாதை| Dinamalar

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தவிப்பு...! மருந்துபெட்டி,சிலிண்டருக்கு மரியாதை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தவிப்பு...!  மருந்துபெட்டி,சிலிண்டருக்கு மரியாதை



மதுரைநு: மதுரை அரசு மருத்துவுமனையில் தடையை மீறி ஸ்டிரக்சர் ,வீல் சேரில் மருந்து பெட்டி, ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்லும் ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் கப்பிணிகள் மற்றும் கர்ப்பிணிகளை அழைத்துச்செல்ல மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை (சீமாங்க) பிரிவு , குழந்தைகள் ஆராய்ச்சி நிலையம், பொது சிகிச்சை இருதய கிசி்ச்சை அரங்கு உட்பட பல்வேறு பிரிவுகள் 2,680 படுக்கைகளுடன் இயங்குகிறது. நோயாளிகளை ஸ்கேன் எடுக்கவும், பிற சிகிச்சைக்கும் ஸ்டிரக்சர் வீல்சேர்களில் அழைத்து செல்ல வேண்டும்,இதற்காக 150 ஸ்டிரக்சர், வீல் சேர்கள் உள்ளன.
ஆனால் ஊழியர்கள் அழைத்துசெல்ல மறுப்பதோடு நடந்தே செல்லுமாறு கூறுகின்றனர். குறிப்பாக சீமாங்க் பிரிவில் டெலிவரி சமயத்தில் ஸ்கேன் எடுக்க நடந்து செலலும் கர்ப்பிணிகளின் கர்ப்பபை பாதித்து வயிற்றுக்குள்ளும், பிறந்த பின்னும் குழந்தை இறப்பு நேரிடுகிறது. இது போன்று மாதம் 90 குழந்தைகள் இறக்கின்றன.இது குறித்த புகாரால் மருந்து பெட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஸ்டிரக்சர், வீல் சேரில் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் மருந்துபெட்டி,சிலிண்டரை எடுத்து செல்லும் ஊழியர்கள், நோயாளிகளை அழைத்து செல்ல மறுக்கின்றனர்.
இது குறித்து விசாரணைக்கு டீன் மருதுபாண்டி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை