ரூ.6 கோடி போக்குவரத்து விதிமீறல்கள் அபராதம் ... 2.33 லட்சம் வழக்கு பதிந்ததில் வசூல்| Dinamalar

தமிழ்நாடு

ரூ.6 கோடி போக்குவரத்து விதிமீறல்கள் அபராதம் ... 2.33 லட்சம் வழக்கு பதிந்ததில் வசூல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரூ.6 கோடி போக்குவரத்து விதிமீறல்கள் அபராதம் ... 2.33 லட்சம் வழக்கு பதிந்ததில்  வசூல்

திருப்பூர்:திருப்பூரில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடந்த ஆண்டில், 2.33 லட்சம் வழக்கு மூலமாக,6 கோடி ரூபாய் வசூலானது.

"டாலர் சிட்டி' என்று அழைக்கப்படும் திருப்பூ ரில் சென்னைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக் கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு ஏற்றவாறு, ரோடு வசதிகள் கிடையாது. பிரதான ரோடுகளில், எப்போது பார்த்தாலும், வாகன நெரி சல் அதிகமாக உள்ளன. அதே நேரம் வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை மதிப்பது கிடையாது.

குறிப்பாக, சிக்னல்களை மதிக்காமல், லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், மது குடித்து விட்டு என பல Œட்ட விதிமுறை மீற லில், டூ வீலர் ஓட்டுவது,சரக்கு வாகனங்களில், அதிகமாக பாரம் ஏற்றி செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, விபத்துக்களை தவிர்க்கவும், சாலை விதிகளை மீறுபவர்களை தடுக்கவும் போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் தினமும் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் விதிகளை மீறுபவர்களிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2017 ஜன., முதல் டிச.,மாதம் முடிய, ஒரு ஆண்டில், குடி போதையில் வாகனம் ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 2 லட்சத்து, 33 ஆயிரத்து, 411 வழக்குகள் பதியப்பட்டது.
இதன் மூலமாக, மொத்தம், 6 கோடியே, 34 ஆயிரத்து, 211 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, மட்டும் 13 ஆயிரத்து, 685 வழக்கு பதியப்பட்டது.
இது குறித்து கமிஷனர் நாகராஜன் கூறுகையில், ""கடந்த ஆண்டில், 2.33 லட்சம் விதிமீறல்கள் வழக்குகள் மூலமாக, 6 கோடி ரூபா#, அபாராதமாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கபட்டுள்ளது.
""அபராதம் விதிப்பதின் நோக்கமே, அடுத்த முறை, மீண்டும் அ@த தவறை வாகன ஓட்டிகள் செய்ய கூடாது, விதிமுறைகளை Œரியாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடாமல், வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மதித்து, வாகனங்களை இயக்க @வண்டும். அப்@பாதுதான், விபத்துகள் தவிர்க்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X