கிராமத்திற்குள் நுழைய முயன்ற யானைகள் விரட்டியடிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்திற்குள் நுழைய முயன்ற யானைகள் விரட்டியடிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடியாத்தம்: ஆந்திரா மாநிலம், சித்தூர் வனப்பகுதியிலிருந்து இரண்டு யானைகள் வழி தவறி, வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்த, தமிழக யானைகள் ஆந்திரா யானைகளை வனப்பகுதிக்குள் நுழைய விடாமல், சண்டையிட்டது. வனத்துறையினர், ஆந்திரா யானைகளை விரட்டி அடித்தனர். இதனால், அந்த யானைகள் பேரணாம்பட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில், இரண்டு யானைகளும் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த, தனகொண்ட பள்ளி கிராமத்திற்குள் நுழைய முயற்சித்தது. இதையறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், இரண்டு மணி நேரம் போராடி, யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை