காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: இந்து முன்னணியினர் 15 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: இந்து முன்னணியினர் 15 பேர் கைது

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் கோட்டையில் திரண்ட, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். காதலர் தினத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டை மைதானத்திற்கு வரும், ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என, ஏற்கனவே இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, வேலூர் கோட்டை வளாகத்திற்குள் மாலை மற்றும் தாலி கயிறுடன் நுழைந்த, 15க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர், ஜோடிகளை தேடி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பில் இருந்த போலீசார், இந்து முன்னணியினருனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை கைது செய்தனர். அப்போது, அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X