மாடல் சிட்டி திட்டத்திற்காக வேலூரில் உலக வங்கி குழு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாடல் சிட்டி திட்டத்திற்காக வேலூரில் உலக வங்கி குழு ஆய்வு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: மாடல் சிட்டி திட்டத்திற்காக, வேலூரில் உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர். வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களை தேர்வு செய்து, மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை, உலக வங்கி குழு மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவிலும் பல்வேறு பெரு நகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு வசதி, சேவைகளை விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வேலூர், ஓசூர், ஈரோடு ஆகிய நகரங்கள் மாடல் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான, முதற்கட்டமாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி குழுவை சேர்ந்த அலுவலர்கள், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளிடம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். சாலை, குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள், தெரு மின்விளக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். விரைவில், உலக வங்கியின் உயர் மட்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்வர். அதன் பிறகு, மாடல் சிட்டி திட்டத்தின் மூலம், விரைவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை