வரும் 16ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 16ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 16ல், நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு, நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்., மாதத்துக்கான, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வரும், 16, காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில், வேளாண் துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள், விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்றனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில், தங்களது பொது பிரச்னைகள் தொடர்பாக தெரிவித்துப் பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை