புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சுகாதார வளாகம் அமைக்கப்படுமா? நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி, மெட்டாலா - ஆத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. கொல்லிமலை மாற்று வழிப்பாதைக்கும், இவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். தினசரி காய்கறி மார்க்கெட்டும் இருப்பதால், மக்கள், விவசாயிகள் கூட்டம் அதிகளவு வந்து செல்கிறது. ஆனால், பொதுக்கழிவறை எதுவும் இல்லை. மெட்டாலாவில் கழிவறை அமைத்தால் உபயோகமாக இருக்கும்.
- பி.முத்து, மெட்டாலா.

சாலையை சீரமைக்க வேண்டும்: பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டையில் இருந்து, மாலாகோவில் வரை, இரண்டு கி.மீ., தூரத்திற்கு சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் செல்ல செல்ல சேதம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில், டூவீலரில் செல்வோர் நிலை தடுமாறி, விழுந்து விடுகின்றனர். சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
- த.ரமேஷ், கொக்கராயன்பேட்டை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை