மலைக்கோட்டையில் காதலர்கள்; 'செல்பி' எடுத்து மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கோட்டையில் காதலர்கள்; 'செல்பி' எடுத்து மகிழ்ச்சி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: காதலர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மலைக்கோட்டைக்கு, காதலர்கள் படையெடுத்தனர். உலகம் முழுவதும், நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பூங்கா, சினிமா தியேட்டர், கோவில்களுக்கு காதலர்கள் சென்றனர். நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மலைக்கோட்டைக்கு, காதலர்கள் படையெடுத்தனர். ஆங்காங்கே ஜோடி ஜோடியாக அமர்ந்து, தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர். மேலும், மலைக்கோட்டையில் அமர்ந்து, நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே உள்ள நேரு பூங்காவிலும், காதலர்களை காண முடிந்தது. காதலன், தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில், காதலிக்கு, ரோஜாப்பூ, பரிசு பொருட்களை வாங்கிக்கொடுத்தனர். அதேபோல், கொல்லிமலை சுற்றுலா தலத்துக்கு, இரு சக்கர வாகனம், பஸ்சில் ஏராளமான காதலர்கள் சென்று வந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை