வரி வசூலிக்கும் உரிமம் நகராட்சியில் பொதுஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரி வசூலிக்கும் உரிமம் நகராட்சியில் பொதுஏலம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளில் வரி வசூலிக்கும் உரிமை சம்பந்தமான பொது ஏலம், நேற்று நடந்தது. இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கூறியதாவது: வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஒலிபெருக்கி வர்த்தக விளம்பரம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு பொது ஏலம் நடந்தது. சந்தையில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், மூன்று லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய்க்கு உறுதி செய்யப்பட்டது. பழைய ஏலத்தொகை, 2.52 லட்சம் ரூபாய். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், ஒலிபெருக்கி வர்த்தக விளம்பரம் செய்தல், 28 ஆயிரம் ரூபாய்க்கு உறுதி செய்யப்பட்டது. பழைய ஏலத்தொகை, 17 ஆயிரத்து, 750 ரூபாய் ஆகும். பஸ் ஸ்டாண்ட் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டுக்கு, ஏலம் எடுக்க, தலா ஒருவர் மட்டும் வந்ததால், இது மறு ஏலத்திற்கு விடப்படும். தினசரி சந்தையில் கட்டணம் வசூலிக்கும் உரிமை, ஆடு அறுக்கும் தொட்டி மற்றும் நகராட்சி எல்லைக்குள் உள்ள கசாப்பு கடைகளில், கோழிக்கடைகளில் சுங்கம் வசூல் செய்யும் உரிமம் உள்ளிட்ட பிற இனங்களுக்கு, மற்றொரு நாளில் ஏலம் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை