விரிவுபடுத்தப்பட்ட சாலையில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விரிவுபடுத்தப்பட்ட சாலையில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், விரிவுபடுத்தப்பட்ட சாலையில், தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பள்ளிபாளையம், பஸ் நிறுத்தத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் சீராக செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையை விரிவுபடுத்தி, நவீன பெரிய நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அங்கு தள்ளுவண்டி கடைகள், நடைபாதை வியாபாரம் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, தள்ளுவண்டி கடைகள், பூ மற்றும் பழக்கடைகளை வரிசையாக நிறுத்தி வியாபாரம் செய்வதால், சாலை குறுகி விடுகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நடந்து செல்லும் மக்கள், சாலையின் மையப்பகுதியில் செல்லவேண்டியிருப்பதால், விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், தள்ளுவண்டி அமைத்து, மேற்கூரை அமைத்து, வியாபாரம் நடக்கிறது. இதே நிலை நீடித்தால், நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து விடும். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு செய்து சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் கடைகள், தள்ளுவண்டிகள் அகற்றப்படும். இதுகுறித்து, போலீசிலும் புகார் செய்யப்படும்' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை