மின்மாற்றி சரி செய்யப்படாததால் விசைத்தறிகள் இயக்கத்தில் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்மாற்றி சரி செய்யப்படாததால் விசைத்தறிகள் இயக்கத்தில் பாதிப்பு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மின் மாற்றி சரி செய்யப் படாததால், 100க்கும் மேற்பட்ட விசைத்தறிகளின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகர் மின் மாற்றி ஒன்று, கடந்த, 9ல் பழுதானதாக கூறப்படுகிறது. இது, நேற்று வரை சரி செய்யப்படாததால், இப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த, 9 காலை, 7:00 மணியளவில் மின்மாற்றி பழுதானது. இதுவரை, சரி செய்யப்படாததால், 100க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி, வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, குப்பாண்டபாளையம் மின் வாரிய அலுவலக உதவிப் பொறியாளர் தமயந்தி கூறுகையில், ''அந்த மின் மாற்றி இன்றுதான் சரி செய்யப்பட்டது. உடனே பொருத்தி, மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை