அண்ணாதுரை சிலை சாலையில் வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை சிலை சாலையில் வீச்சு

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: மணலி ஜேடர்பாளையத்தில், அண்ணாதுரை சிலை சாலையோரத்தில் வீசப்பட்டது. திருச்செங்கோடு அடுத்த, மணலி ஜேடர்பாளையத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பஸ் நிறுத்தத்தில், 1992ல், முன்னாள் முதலவர் அண்ணாதுரை சிலை அப்பகுதி மக்களால் நிறுவப்பட்டது. தற்போது, கடந்த, 10 இரவு, மர்ம நபர்களால் திடீரென அகற்றப்பட்டு, சாலையோரத்தில் வீசப்பட்டது. பகுதிவாசிகள், எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், சிலையை மீட்டனர். 'சிலையை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதே பீடத்தில் சிலையை நிறுவ வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை