பதனீர் விற்பனை அமோகம்: பனை ஓலையில் அருந்தும் இளைஞர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதனீர் விற்பனை அமோகம்: பனை ஓலையில் அருந்தும் இளைஞர்கள்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: அலமேடு பகுதியில், சாலையோரத்தில் பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை பானங்களில் பதநீர் முக்கிய இடத்தில் உள்ளது. கிராமப்புறங்கள் தவிர, நகர்ப்புறத்தில் அதை காண்பது மிகவும் அரிது. கடந்த சில நாட்களாக, நகர்ப்புறத்தில் பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிபாளையம் அடுத்த, அலமேடு பகுதியில், சாலையோரத்தில் டூவீலர் மூலம், பதநீர் விற்பனை நடக்கிறது. இதுகுறித்து, விற்பனையாளர் கூறியதாவது: திருச்செந்தூரில் இருந்து, ஈரோடு அருகே பவானியில் தங்கியிருந்து, இந்த பகுதியில் பதநீர் இறக்கி விற்பனை செய்கிறோம். இது, இனிப்பு சார்ந்தது. இயற்கை மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடம்புக்கு குளிர்ச்சி தருவது. ஒரு டம்ளர், 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பனை மரத்து ஓலையில், இளைஞர்கள் ஆர்வமுடன் அருந்துகின்றனர். மூன்று மாதங்கள் வரை விற்பனை இருக்கும். வெயில் காலத்தில், விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X